மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு; சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்

மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியீடு; சென்னை மாணவி கீர்த்தனா முதலிடம்
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜூன் 10ம் தேதி  அறிவிக்கை வெளியிடப்பட்டது.

மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை  23 அரசு மருத்துவ கல்லூரிகளில் பணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றனர்.


இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர். ஜூன் 19ம் தேதி மாலை வரை 43,935 விண்ணப்பத்தை சமர்பித்திருந்தனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 6,500 இடங்கள் உள்ளன.

ஜூலை 1ம் தேதி முதல் தேதி முதல்கட்ட  கலந்தாய்வை தொடங்கவும், ஜூலை 2வது வாரத்தில் 2வது கட்ட கலந்தாய்வையும் நடத்தி, செப்டம்பர் 30ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க மருத்துவகல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.


சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை தருமபுரி மாணவர் அபிஷேக்கும், 3வது இடத்தை சென்னை மாணவர் பிரவீனும் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மொத்தம்  25,417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்று கூறினார்.


மேலும் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் ஆண்கள் 10,473 பேர், பெண்கள் 17,593 பேர் மற்றும் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 28,067 ஆக உள்ளது என்றும் 5% ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறினார். இதனிடையே ஜூலை 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/nXVE6q


17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்