மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கோவை விடுதி வார்டன் புனிதா சரண்
கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 45). தொழில் அதிபரான இவர் கோவை ஹோப் காலேஜ் அருகே உள்ள பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் ‘தர்‌ஷனா’ என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்தார். இங்கு கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இளம்பெண்கள் தங்கி இருந்தனர்.

இந்த விடுதியில் பீளமேடு தண்ணீர் பந்தலை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி இருந்த மாணவிகளை தனியார் ஓட்டலுக்கு அழைத்துச்சென்ற புனிதா, அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்து, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மற்றும் சிலரிடம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி அவர்களை தவறான பாதைக்கு அழைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களின் பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்த னர். அதன்பேரில் போலீசார் கடந்த 23–ந் தேதி ஜெகநாதன், புனிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையே நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. மேலும் காணாமல் போன புனிதாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

அவர் பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் மூணாறு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து,  தனிப்படை போலீசார் அந்தப்பகுதிகளில் முகாமிட்டு கர்நாடக, கேரள போலீசாரின் உதவியுடன் புனிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விடுதி காப்பாளர் புனிதா. கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
https://goo.gl/ugvngD






06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்