மின்சாரமின்றி 'டார்ச் லைட்' உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மரணம்

மின்சாரமின்றி 'டார்ச் லைட்' உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மரணம்
பீகார் மாநிலத்தின் சாகர்ஸா பகுதியில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 சாகர்ஸா எனும் பகுதியில் செயல்பட்டு வரும் சர்தார் மருத்துவமனையில், கடந்த மார்ச் 19-ம் தேதியன்று  விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன் பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியில்லாத காரணத்தால் பெண் ஒருவர் டார்ச் லைட் அடிக்க மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்தச் சம்பவம் குறித்து, சர்தார் மருத்துவமனை அதிகாரிகள் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில், பீகார் மாநிலத்தில் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த பெண் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக அவரின் உறவினர்கள் கூறுகையில்; டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்தது காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

 இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மின்சாரம் தடை காரணமாக அம்மாநிலத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இத்தகைய சம்பவம் தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயர் ரூபி தேவி என்றும் அவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
https://goo.gl/rrWNHN


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்