மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது

மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறி இறங்கியது. பின்னர் தொடர்ந்து விலை அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 21-ந்தேதி ஒரு பவுன் ரூ. 23 ஆயிரத்து 944 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 48 அதிகரித்து ரூ. 23 ஆயிரத்து 992 ஆனது. இன்று பவுனுக்கு மேலும் ரூ. 56 உயர்ந்ததன் மூலம் பவுன் ரூ. 24 ஆயிரத்தை கடந்தது. ஒரு பவுன் ரூ. 24 ஆயிரத்து 48 ஆகவும், ஒரு கிராம் ரூ. 3006 ஆகவும் உள்ளது.

விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வும் காரணமாக கருதப்படுகிறது. மேலும் பங்கு சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பும், திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரிப்பும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.

வெள்ளி ஒரு கிலோ ரூ. 63 ஆயிரத்து 610 ஆகவும், ஒரு கிராம் ரூ. 68.10 ஆகவும் உள்ளது.
https://goo.gl/vv3vuG






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்