tamilkurinji logo


 

மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது தங்கம் விலை,Gold rate hike

Gold,rate,hike




மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது தங்கம் விலை

First Published : Wednesday , 22nd August 2012 07:50:43 AM
Last Updated : Wednesday , 22nd August 2012 07:50:43 AM


மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது தங்கம் விலை,Gold rate hike

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி டெல்லியில் அதிகபட்சமாக 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்து 750 என்ற அளவிற்கு உயர்ந்தது. அந்த சாதனை அளவை தற்போது நெருங்கி வருகிறது.
 
இன்று தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. மாலை நிலவரப்படி டெல்லியில் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 235 அதிகரித்து, ரூ.30,745 என்ற அளவில் இருந்தது. இன்னும் 5 ரூபாய் அதிகரித்தால் ஜூன் மாத சாதனையை எட்டிவிடும்.
 
இதேபோல் மும்பையில் 24  காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.30,420 ஆகவும், கொல்கத்தாவில் 240 ரூபாய் அதிகரித்து ரூ.30,725 ஆகவும், சென்னையில் 85 ரூபாய் உயர்ந்து ரூ.30 ஆயிரத்து 415 ஆகவும் விற்பனையானது.
 
இதேபோல் 22 காரட் தங்கம் விலையும் உயர்ந்தது. சென்னையில் இன்று சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.22752 ஆகவும், ஒரு கிராம் ரூ.2844 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.59.20க்கு விற்பனை செய்யப்பட்டது.


மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது தங்கம் விலை,Gold rate hike மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது தங்கம் விலை,Gold rate hike மீண்டும் உச்சத்தைத் தொடுகிறது தங்கம் விலை,Gold rate hike
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 22,000- தொடுகிறது சென்செக்ஸ் -இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு
இந்திய பங்குச்சந்தையில் இன்று வரலாறு காணாத அளவிற்கு சென்செக்ஸ் உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 21998 புள்ளிகளாக ஆனது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 6558ஆக காணப்பட்டது.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in