முடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil
,guava leaves benefits for hair in tamil guava leaves for hair growth review how to use guava leaf for hair beauty
முடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய்யும் கொய்யா இலைகள்| guava leaves benefits for hair in tamil
First Published : Thursday , 24th August 2017 06:28:39 PM Last Updated : Thursday , 24th August 2017 06:45:05 PM
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இந்த கொதிக்கும் தண்ணீரில் தேவைாயன அளவு கொய்யா இலைகளை போட வேண்டும். இந்த தண்ணீரை 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைமுடியை ஷாம்பு கொண்டு நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். கண்டிஸ்னர் போட வேண்டாம். தலைமுடி காய்ந்ததும், இந்த கொய்யா இலை தண்ணீரை தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும். தலையை நன்றாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
முடியின் வேர்க்கால்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். இதனை இரண்டு மணிநேரம் அப்படியே தலையில் விட்டுவிட வேண்டும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் முடியை அலச வேண்டும்.
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருந்தால், இதனை வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். முடி நன்றாக வளர வேண்டும் என்றால், வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
கொய்யா இலையில் உள்ள விட்டமின் சி முடியை வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர வைக்க கூடியது.
கொய்யா இலைகளில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. இது முடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்திற்கும், பொடுகுத்தொல்லையை போக்குவதற்கும் திறந்த தீர்வாக உள்ளது.
மேலும் இதில் விட்டமின் சி, மற்றும் விட்டமின் பி மிக அதிகளவில் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த கொய்யா இலைகளை கூந்தலுக்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
இந்த கொய்ய இலை சாறை தலையில் தடவி மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடியின் வேர்க்கால்களுக்கு சத்துக்களை கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. முடியை ஆரோக்கியமாகவும் வளர் செய்யக்கூடியது.
அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய
கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,
அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த
முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் அதை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.