முடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall,vitamins hair falling outfood diet to control hair fall tamil beauty tips tamil alagukurippu hairfall mudi kotta karanam tamilthalai mudi kottuthu
முடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall
First Published : Wednesday , 30th August 2017 06:49:19 PM Last Updated : Wednesday , 30th August 2017 06:49:19 PM
முடியை அதிக வறட்சியின்றி வைத்திருக்க உதவுவது விட்டமின் ஏ. தலை முடி வறண்டுவிடாமல் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இதற்கு ஆரஞ்சுப் பழம், மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், ப்ரோக்கோலி,முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று விட்டமின் பி குறைபாடு தான். குழந்தைப் பருவத்தில் பி12 பற்றாக்குறை இருந்தால் நரைமுடி வர வாய்ப்புகளும் உண்டு.
இதனைத் தவிர்க்க மீன்,ஆட்டுக்கறி,பால், முட்டை போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம்
சிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழங்கள், தக்காளி,உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர்,பெர்ரீ பழங்கள் போன்றவற்றில் விட்டமின் சி கிடைக்கும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும்.
செல்களின் வளர்ச்சிக்கு விட்டமின் டி மிகவும் அவசியமானது. மாட்டுக்கறி, மீன்,சீஸ் போன்றவற்றில் விட்டமின் டி இருக்கிறது.
தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்தது அத்திப்பழம். தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தவிர்க்க முடியும்.
இந்த உணவு முறைகளை பின்பற்றினால் முடி கொட்டுவது குறைந்து முடி நன்கு வளரும்.
அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள் தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய
கோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்ககுளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.கண் கருவளைம்கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க,
அக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இந்த
முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil 2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும்.உங்களது முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை அப்படியே 20 முதல்