முன்னணி 7 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.31,792 கோடி சரிவு

முன்னணி 7 நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.31,792 கோடி சரிவு
சென்ற வார பங்கு வர்த்தகம் ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டது. டாப் 10 கம்பெனிகளில் முன்னணி 7 நிறுவன பங்குகள் மதிப்பு ரூ.31,792 கோடி சரிவடைந்தது. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் மதிப்பு ரூ.12,974 கோடி குறைந்து ரூ.1.30 லட்சம் கோடியாக சரிந்தது.

கோல் இந்தியா

அடுத்ததாக, பொதுத் துறை நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியா பங்குகளின் மதிப்பு ரூ.4,580 கோடி சரிவடைந்து ரூ.2.23 லட்சம் கோடியாக குறைந்து போனது.

பொது துறையைச் சேர்ந்த எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யின் பங்குகள் மதிப்பு ரூ.4,491 கோடி குறைந்து ரூ.2.37 லட்சம் கோடியாக சரிந்தது.

ஐ.டி. சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் மற்றும் செல்போன் சேவையில் ஈடுபட்டு வரும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு முறையே ரூ.3,948 கோடி மற்றும் ரூ.2,753 கோடி குறைந்ததில் அவற்றின் சந்தை மதிப்பு முறையே ரூ.1.23 லட்சம் கோடி மற்றும் ரூ.1.17 லட்சம் கோடியாக சரிவடைந்தன.

பொதுத் துறை மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி.யின் பங்கு மதிப்பு ரூ.2,309 கோடி குறைந்து ரூ.1.26 லட்சம் கோடியாக குறைந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மதிப்பு ரூ.737 கோடி சரிவடைந்து ரூ.2.36 லட்சம் கோடியாக குறைந்தது.

டி.சி.எஸ்.

இருப்பினும், டி.சி.எஸ். நிறுவன பங்குகள் மதிப்பு ரூ.529 கோடி உயர்ந்து ரூ.2.40 லட்சம் கோடியாக அதிகரித்தது.

தனியார் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐ.டி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.1,173 கோடி அதிகரித்து அந்நிறுவனம் தனது சந்தை மதிப்பினை ரூ.1.99 லட்சம் கோடியாக உயர்ந்தது.

தனியார் வங்கியான எச்.டீ.எஃப்.சி.யின் பங்கு மதிப்பு ரூ.294 கோடி அதிகரித்து ரூ.1.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ஓ.என்.ஜி.சி.

பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ஓ.என்.ஜி.சி.யை பின்னுக்கு தள்ளி டி.சி.எஸ். முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசும், நான்காவது, ஐந்தாவது இடங்களில் முறையே கோல் இந்தியா மற்றும் ஐ.டி.சி. ஆகிய நிறுவனங்களும் உள்ளன. எச்.டீ.எஃப்.சி. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களை பிடித்துள்ளன.

எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் என்.டி.பி.சி., இன்ஃபோசிஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
https://goo.gl/k24WuJ


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்