tamilkurinji logo


 

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ...

Karunanidhi,death:,M,Karunanidhi,,DMK,chief,and,former,Tamil,Nadu,...




செய்திகள் >>> தமிழகம்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்

First Published : Tuesday , 7th August 2018 07:00:26 PM
Last Updated : Tuesday , 7th August 2018 07:00:26 PM


முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ...

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.


25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27 ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக ஜூன் 3-ம் தேதி 1924-ம் ஆண்டு பிறந்தார்.


கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும். அவர் தன்னுடைய 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார். அதன் பின்னர் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் கருணாநிதி தன் அரசியலில் தீவிரத்தைக் காட்டினார்.

தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கியவர் கருணாநிதி ஆவார். தன் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார்.

பின்னர் குளித்தலையில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்றத்தில் திமுக அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1967-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. கருணாநிதி பொருளாளராக கட்சியில் உயர்வு பெற்றார். மேலும் தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்திருந்தார். ஒரு கட்சியின் தலைவாரக 50 ஆணடு தொடர்வது என்பது மிக பெரிய சாதனையாகும். அதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி நிகழ்த்தியுள்ளார். திமுக தலைவர் 50-ம் ஆண்டு பொன் விழாவை கடந்த மாதம் 27 ம் தேதி கொண்டாடினார்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல் நிலை குறித்து தொலைபேசியல்  பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்

. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் ஆகியோர் நேரில் சென்று ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வெளி மாநில முதல்வர்கள் , நடிகர்கள் ஆகியோர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து நேரில் சென்று கேட்டறிந்தனர். இந்நிலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.



முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ... முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ... முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்,Karunanidhi death: M Karunanidhi, DMK chief and former Tamil Nadu ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in