tamilkurinji logo


 

முன்பேர சந்தைகளில் வர்த்தகம் ரூ.80.30 லட்சம் கோடியாக சரிவு,commodity market

commodity,market




முன்பேர சந்தைகளில் வர்த்தகம் ரூ.80.30 லட்சம் கோடியாக சரிவு

First Published : Monday , 1st October 2012 08:25:06 PM
Last Updated : Monday , 1st October 2012 08:25:06 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

முன்பேர சந்தைகளில் வர்த்தகம்  ரூ.80.30 லட்சம் கோடியாக சரிவு,commodity market

முன்பேர சந்தைகளில், ஏப்ரல் முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம் ரூ.80.30 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.82.39 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, மதிப்பின் அடிப்படையில் முன்பேர வர்த்தகம் 3 சதவீதம் குறைந்துள்ளது.

தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம் தொடர்ந்து சரிவடைந்து வருவதே இதற்கு காரணமாகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் 15 வரை தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம் 26 சதவீதம் சரிவடைந்து ரூ.37.11 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.50.38 லட்சம் கோடியாக இருந்தது. கணக்கீடு செய்ய எடுத்துக் கொண்ட காலத்தில் தங்கம், வெள்ளி தவிர இதர பல முக்கிய விளைபொருள்கள் மீதான வர்த்தகம் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.

தங்கம் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு வரியை உயர்த்தியதால் இறக்குமதி சரிவடைந்து வருகிறது. மேலும் அண்மைக் காலத்தில் தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால் முன்பேர வர்த்தகத்திலும் தங்கம்-வெள்ளி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் மீது ரூ.17.48 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது 42 சதவீத வளர்ச்சியாகும். தாமிரம் போன்ற சாதாரண உலோகங்கள் மீதான வர்த்தகம் 30 சதவீதம் உயர்ந்து ரூ.14.73 லட்சம் கோடியாக உள்ளது. வேளாண் விளைபொருள்கள் மீது ரூ.10.95 லட்சம் கோடிக்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.8.33 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இதில் 31 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தற்போது தேசிய அளவில் தற்போது ஐந்து சந்தைகளும், பிராந்திய அளவில் 16 சந்தைகளுமாக மொத்தம் 21 முன்பேர வர்த்தக சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

முன்பேர சந்தைகளில் வர்த்தகம்  ரூ.80.30 லட்சம் கோடியாக சரிவு,commodity market முன்பேர சந்தைகளில் வர்த்தகம்  ரூ.80.30 லட்சம் கோடியாக சரிவு,commodity market முன்பேர சந்தைகளில் வர்த்தகம்  ரூ.80.30 லட்சம் கோடியாக சரிவு,commodity market
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே இன்று சரிந்தது. கடந்த மாதம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2668 ரூபாய்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in