tamilkurinji logo


 

முல்லைப் பெரியாறு அணையில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு - கேரள அதிகாரிகள் புறக்கணித்தனர்,Mullaperiyar inspection disappointing, says Kerala

Mullaperiyar,inspection,disappointing,,says,Kerala




செய்திகள் >>> தமிழகம்

முல்லைப் பெரியாறு அணையில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு - கேரள அதிகாரிகள் புறக்கணித்தனர்

First Published : Sunday , 25th December 2011 07:59:37 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


முல்லைப் பெரியாறு அணையில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு - கேரள அதிகாரிகள் புறக்கணித்தனர்,Mullaperiyar inspection disappointing, says Kerala

முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து உயர்நிலைக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்வை கேரள அதிகாரிகள் புறக்கணித்தனர்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவில் கேரள அரசின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ், தமிழகத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், மத்திய நீர்வளத் துறை செயலாளர்கள் சி.டி. தத்தே, டி.கே. மேத்தா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முல்லைப்பெரியாறு அணையில் 2 கட்டங்களாக ஆய்வு செய்தனர். அப்போது அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண் படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது. அணையின் பலம் குறித்து இக் குழுவின் கண்காணிப்பில் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றன.

இந் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாகவும் அணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உயர்நிலைக் குழுவினரிடம் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உயர்நிலைக் குழுவில் இடம் பெற்று உள்ள மத்திய நீர்வளத் துறை செயலாளர்கள் சி.டி. தத்தே, டி.கே. மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் முதலில் இடுக்கி அணை மற்றும் அதன் அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய காலை 9.30 மணியளவில் தேக்கடி படகு துறைக்கு வந்தனர். பின்னர் தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

அவர்களுடன் தமிழஉயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களான கத்தின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணி, உறுப்பினரும் கண்காணிப்புப் பொறியாளருமான செல்வராஜ், அணைகள் பாதுகாப்பு இயக்குதல் கண்காணிப்புப் பொறியாளர் செல்வம், சென்னை முதன்மை தலைமைப் பொறியாளர் ராஜகோபால், பெரியாறு- வைகை முதன்மைப் பொறியாளர் சம்பத்குமார், கண்காணிப்புப் பொறியாளர் மோகனசுந்தரம், அணையின் செயற்பொறியாளர் ராஜேஷ் ஆகியோரும், கேரளத்தின் சார்பில் அந்த மாநில அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பரமேஸ்வர நாயர், உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன், நீர்ப்பாசனத் துறையின் தலைமைப் பொறியாளர் பி. லத்திகா, மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் கருப்பன் குட்டி ஆகியோர் உடன் சென்றனர்.

அணைக்கு சென்றவுடன் அணையின் பின்பகுதியில் உள்ள கேலரிக்கு சென்று அடிப்பகுதியை பார்வையிட்டனர். அடிக்கடி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் 7 துளைகள் போட்டு ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளையும் அப்போது பார்வையிட்டனர். அப்போது ஆய்வுப்பணி தொடர்பாக உயர்நிலைக் குழுவினருக்கும் கேரள அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அணையில் துளைகள் இடும் பகுதிகளை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, கேரள அணை பாதுகாப்பு பொறியாளர் லத்திகா அணையில் வேறு சில இடங்களையும் மற்றும், தாங்கள் குறிப்பிடும் பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை உயர்நிலைக் குழுவினர் சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து பொறியாளர் லத்திகா நிருபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர், "உயர்நிலைக் குழுவினர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவற்றை கேட்க மறுக்கின்றனர். அணைப்பகுதிகளில் நாங்கள் பார்வையிட சொல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மறுக்கின்றனர். அதனால் நாங்கள் இந்த ஆய்வை புறக்கணிக்கிறோம்'' என்று கூறியதாக தெரிகிறது.

இதையறிந்த உயர்நிலைக் குழுவினர், கேரள அதிகாரிகளிடம், ``நீங்கள் இதுபோல் செயல்படக்கூடாது'' என்று தெரிவித்தனர். அதற்கு கேரள அதிகாரிகள், ``இந்த ஆய்வில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதனால் ஆய்வை நாங்கள் புறக்கணிக்கிறோம்'' என்று கூறினார்கள். இதனால் லேசாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மத்திய குழுவினர் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் கேரள அதிகாரிகள் குற்றம் சாட்டியதால் ஆய்வு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கேரள அதிகாரிகள் புறக்கணித்த போதிலும் தொழில்நுட்ப குழுவினர் அணையை முழுவதுமாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாலையில் அணையில் தமிழக மதகு பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மாலை 61/2 மணியளவில் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடி திரும்பினர். அதன்பிறகு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கேரள-தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் உயர்நிலைக் குழுவினர் ஆலோசனை செய்தனர்.

இதற்கிடையே, தண்ணீருக்குள் அணையின் அடிப்பகுதியை அளந்து ஆய்வு செய்வதற்காக எக்கோ சவுண்ட் என்ற கருவி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் அணையின் அடிப்பகுதியில் தண்ணீருக்குள் இருக்கும் மண்ணின் தன்மை மற்றும் அடிப்பகுதியின் அளவுகள் ஆகியவை இந்த கருவில் ஏற்படும் சத்தத்தின் மூலம் கண்டு பிடிக்கப்பட உள்ளது. இந்த பணிகளை அடுத்த மாதம் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு - கேரள அதிகாரிகள் புறக்கணித்தனர்,Mullaperiyar inspection disappointing, says Kerala முல்லைப் பெரியாறு அணையில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு - கேரள அதிகாரிகள் புறக்கணித்தனர்,Mullaperiyar inspection disappointing, says Kerala முல்லைப் பெரியாறு அணையில் உயர்நிலைக் குழுவினர் ஆய்வு - கேரள அதிகாரிகள் புறக்கணித்தனர்,Mullaperiyar inspection disappointing, says Kerala
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி
திமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.திமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in