tamilkurinji logo


 

முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி,
செய்திகள் >>> தமிழகம்

முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

First Published : Monday , 26th December 2011 10:13:38 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி,

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, டைரக்டர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சேரன், விக்ரமன், கவுதமன், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன், ஓவியர் வீரசந்தானம், கவிஞர் தாமரை, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கண்ணகி சிலை பின்புறம் சர்வீஸ் சாலையில் தொடங்கிய பேரணி, கலங்கரை விளக்கம் அருகே முடிவுற்றது. பின்னர், அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தலைவர்கள் தரையில் அமர்ந்து பேசத்தொடங்கினார்கள்.

டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:-

நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால், உணர்வு பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மை காரணமாக பலவற்றை இழந்து வருகின்றனர். இனியும் இழக்க வேண்டுமா?. முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தை சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும். தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றப்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள மந்திரி சொல்கிறார். மேலும், அந்த அணையை உடைப்பதால் கிடைக்கும் கற்குவியலை சாலைகள் அமைக்க பயன்படுத்துவோம் என்றும் கூறுகிறார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி மத்திய அரசிடம் கேரள அரசு கொடுத்த அறிக்கையில், முல்லை பெரியாறு அணை 2 மாநில பயன்பாட்டுக்கு அல்ல. கேரளத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது. உண்மையில் திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி மலையில் இருந்துதான் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் செல்கிறது.

கேரளா நமது தயவு இல்லாமல் வாழவே முடியாது. ஏனென்றால், அங்குள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவை இங்கிருந்துதான் செல்கின்றன. அதனால், மத்திய போலீஸ் படை அங்கு பாதுகாப்புக்கு வராவிட்டாலும், அவர்கள் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடியாது. ஏனென்றால் தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

டைரக்டர் தங்கர்பச்சான் பேசியதாவது:-

சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளாக தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் அரசியல்வாதிகள்தான். தன்னலப்போக்குடன் அரசியல்வாதிகள் செயல்படுவதுதான் காரணம். நாம் ஏமாந்து போகிறோம். விழித்துக்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக, கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி, எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் ஆகியோர் ஒன்றாக கூடி பிரதமரை போய் சந்திக்கிறார்கள். ஆனால், நமது அரசியல் தலைவர்கள் எங்கே போனார்கள். கேரள எம்.பி.க்களும் பிரதமரை ஒன்றாக சந்தித்தார்கள். ஆனால், தமிழக எம்.பி.க்கள் பிரதமரை தனித்தனியாக போய் சந்திக்கிறார்கள். ஏன் இந்த பாகுபாடு. இனியாவது தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் உரிமைப் பிரச்சினை என்று வரும்போது, அனைத்து அரசியல் தலைவர்களும் சொந்த பிரச்சினைகளை மறந்து ஒரே மேடையில் கூடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி, முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி, முல்லைப் பெரியாறு விவகாரம் - சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி
திமுகவில் சேர தொடர்ந்து மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அழகிரி, அதை ஸ்டாலினிடம் கேளுங்கள், ஏன் சேர்க்கவில்லை என்று கேளுங்கள், என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று காட்டமுடன் தெரிவித்தார்.திமுகவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in