tamilkurinji logo


 

மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்,




செய்திகள் >>> தமிழகம்

மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்

First Published : Thursday , 29th December 2011 08:25:59 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்,

மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் விவசாய நிலத்தில் பொறியியல் கல்லூரி கட்டியது மற்றும் குளத்து மடைக்கு சேதம் விளைவித்தது குறித்த புகார் தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி ஆகியோர் ஜனவரி 4-ல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி எம்.கே. அழகிரி கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இது விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், அருகில் உள்ள கரிசல்குளத்தின் மதகுகளை கல்லூரிக் கட்டுமானத்திற்காக சேதப்படுத்தியதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், புகாரில் உண்மை இருப்பதாக ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, அவரது மனைவி, மகன் ஆகியோர் ஆஜராகி புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி கடந்த செப்டம்பரில் மாவட்ட ஆட்சியர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த நோட்டீஸில் தேவையில்லாத வாசகங்கள் இருப்பதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி, அழகிரி தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவையில்லாத வாசகங்களை நீக்கும்படி உத்தரவிட்டது. வாசகங்களை நீக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இந்நிலையில், அமைச்சர் அழகிரி உள்ளிட்டோர் ஜனவரி 4-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ், மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ், மு.க.அழகிரிக்கு மதுரை கலெக்டர் மீண்டும் நோட்டீஸ்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை
துணை நடிகையின் கள்ளக்காதலனை கொடைக்கானலில் வைத்து, கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை தலைமறைவானார். இதில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் தேதி போலீசார் மீட்டனர். காரில்

மேலும்...

 சேலம்-சென்னை ரெயில் ரூ.5.75 கோடி கொள்ளை : 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது.
சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம,் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின், நாசா சாட்டிலைட் உதவியுடன் துப்பு துலங்கியுள்ளது.கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி

மேலும்...

 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in