மூன்று மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வி - சமாஜ்வாடி வெற்றி

மூன்று மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வி - சமாஜ்வாடி வெற்றி
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர், புல்புர் மற்றும் பீகார் மாநிலம் அராரியா மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.


கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உபேந்திர தத் சுக்லாவை சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் தோற்கடித்தார்.

கோரக்பூர் தொகுதியில் கடந்த ஐந்து முறையும் நடந்த தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது.

புல்புர் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர பிரதாப் சிங் தோற்கடித்தார். இந்த தொகுதியும் பா.ஜ.க வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பீகாரின் அராரியா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரை ராஷ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர் சுமார் 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதே மாநிலத்தில் இரு சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், பா.ஜ.க ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

கோரக்பூர் மற்றும் புல்புர் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/U7GkST


19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை