tamilkurinji logo


 

மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி,




செய்திகள் >>> இந்தியா

மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி

First Published : Tuesday , 16th February 2010 07:11:44 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி,

மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படையினரின் முகாம் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ள மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி, "மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பதிலடிதான் இது" என்று கூறியுள்ளார்.

இது குறித்த விவரம்:

மேற்கு வங்கத்தின் மேற்கு மிதுனபுரி மாவட்டம் சில்தா பகுதியில் துணை ராணுவப் படையினரின் முகாம் உள்ளது. இங்கு கிழக்கு எல்லை துப்பாக்கிப் படை பிரிவைச் சேர்ந்த 51 வீரர்கள் தங்கியிருந்தனர்.திங்கள்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் ஜீப்கள் மற்றும் 25 மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுமார் 100 மாவோயிஸ்டுகள் இந்த முகாமைச் சுற்றி வளைத்தனர்.தொடர்ந்து சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியும், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் வெறித் தாக்குதல் நடத்தினர். பின்னர் முகாமுக்கு தீ வைத்தனர்.முகாமில் இருந்த துணை ராணுவத்தினர் இந்த தாக்குதலை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரித்துக் கொள்வதற்கு முன், சுமார் 24 வீரர்கள் வெடி குண்டுகளுக்கும், துப்பாக்கி குண்டுகளுக்கும் பலியாகிவிட்டனர். இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.தாக்குதலுக்குப் பின் அந்த முகாமுக்கு வரும் பாதை நெடுகிலும் மாவோயிஸ்டுகள் கண்ணி வெடிகளைப் புதைத்து வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

"தாக்குதல் நடந்த போது முகாமில் இருந்த வீரர்கள் பலர் ஓய்வுவெடுத்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நேரத்தில் மாவோயிஸ்டுகள் எதிர்பாராத விதத்தில் தாக்குதல் நடத்தியதால் உயிரிழப்பு அதிகமாகிவிட்டது" என்று மேற்கு மிதுனபுரி மாவட்ட ஆட்சியர் என்.எஸ். நிகாம் கூறியுள்ளார்.

மற்றொரு தாக்குதல்:

லால்கர் பகுதியில் உள்ள துணை ராணுவப் படையின் மற்றொரு முகாம் மீதும் இரவு 8.30 மணியளவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 40 மாவோயிஸ்டுகள் ஜீப் மற்றும் பைக்குகளில் வந்து குவிந்து முகாமைச் சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். ராணுவத்தினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனையடுத்து மாவோயிஸ்டுகள் தப்பியோடி விட்டனர். இதில் யாராவது பலியாகினரா என்பது குறித்த விவரம் உடனடியாகத் தெரியவரவில்லை.

மாவோயிஸ்ட் தலைவர் பொறுப்பேற்பு:

இந்த கொடூரத் தாக்குதலுக்கு மாவோயிஸ்டு தலைவர் கிஷன்ஜி பொறுப்பேற்றுள்ளார். "மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சர் எடுத்துள்ள "ஆபரேஷன் கிரீன் ஹண்ட்" நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம். எங்கள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்திக் கொண்டால் நாங்கள் பேச்சு நடத்த முன்வருவோம். இல்லை என்றால் இது போன்ற தாக்குதல்கள் தொடரும்" என்று கிஷன்ஜி கூறியுள்ளார்.


மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி, மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி, மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in