ராஜீவ் காந்தியை கொன்றது போல பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.

ராஜீவ் காந்தியை கொன்றது போல  பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல, தற்போதைய பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியிருக்கும் தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த கொடூர சதித்திட்டம் மாவோயிஸ்ட்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தால் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மகாராஷ்டிராவில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரோனா ஜேக்கப் என்பவரிடம் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது.

அக்கடிதத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்டது போல், தற்போதைய பிரதமர் மோடியை கொலை செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கடித்தில் இந்த நிகழ்வை நடத்தி முடிக்க மக்களை சந்திக்கும் பேரணி மற்றும் சாலை வழியில் நடக்கும் கான்வாயில் குண்டு வைப்பதென்று முடிவு செய்திருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை புனே காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பின் முறைப்படி, மத்திய உளவுத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மோடி பிரதமராக பதவியேற்ற பின் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளார். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுககளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

https://goo.gl/e6S7yT






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்