ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி  சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள் கடந்த 2015-ம் ஆண்டில் காணாமல்போயின. இது தொடர்பாக சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதேபோல, கடந்த 2015-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசி அருகே உள்ள சவுந்தரியபுரத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டன.

மேலும், வந்தவாசி அருகே பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் இருந்து வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் திருடு போயின. இவை தொடர்பாக வந்தவாசி வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்த வழக்குகளில் 16 பேர் குற்ற வாளிகளாக சேர்க்கப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான சென்னை புழல் காவாங்கரையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற குமார் (40) அப்போது தப்பிவிட்டார்.

இந்த 3 வழக்குகள் தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், உதவி ஆய்வாளர் ஜூலியஸ் சீசர் ஆகியோர் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் சந்தேகப்படும் வகை யில் சென்ற தனலிங்கம் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் ஏற் கெனவே திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான 8 சுவாமி சிலைகள் இருந்தன.


அச்சிலைகளை பறிமுதல் செய்ததுடன், தனலிங்கத்தை தொடர்ந்து விசாரித்தனர். அப்போது, புழல் காவாங்கரையைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவர் சிலைகளை கோயிலில் இருந்து திருடி விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து டிஎஸ்பி சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, விநாயகமூர்த்தி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரைக் கொண்ட தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஜெய்குமாரைத் தேடி வந்தனர். இந் நிலையில் காவாங்கரையில் நேற்று அவரை கைது செய்தனர்.

பின்னர், கும்பகோணம் நீதிமன்றத் தில் ஜெயக்குமாரை நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஜூலை 4-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தும், அதுவரை ஜெயக்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

https://goo.gl/LYuZeS






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்