tamilkurinji logo


 

ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு,
செய்திகள் >>> தமிழகம்

ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

First Published : Saturday , 24th December 2011 08:00:55 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு,

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில் கைவிரல் ரேகை, கண்ணின் கருவிழி பதிவுடன் புதிய மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன. எனவே தற்போதைய ரேஷன் கார்டுகளை மேலும் ஓர் ஆண்டு நீடிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில், தற்போது நடைமுறையில் உள்ள ரேஷன் கார்டுகளின் (குடும்ப அட்டைகள்) செல்லுபடியாகும் காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது.

போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில், புதிய மின்னணு ரேஷன் கார்டுகளை வழங்க தமிழக அரசு தீர்மானித்து உள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், தற்போதுள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஓர் ஆண்டுக்கு நீடித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் "அனைவருக்குமான பொது விநியோக திட்டம்" அனைவருக்கும் உணவு பாதுகாப்பை வழங்கும் ஓர் உன்னதமான திட்டமாகும்.

நியாய விலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் போதுமான அளவு உணவுப் பொருட்கள் வழங்குதல், மக்கள் எளிதில் அணுகிப் பெறக்கூடிய வகையில் நியாய விலைக்கடைகளை அமைத்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பொது விநியோகத் திட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் குடும்ப அட்டையில் தன் பெயரை பதிவு செய்திருந்தால், அதனைக் கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை. இதன் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம் பெற்றுள்ள நிலையும், போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்ற நிலையும் உள்ளது. இது போன்ற குறைபாடுகளை களைய, தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும்.

தற்போதுபுழக்கத்தில் இருக்கும் ரேசன் கார்டுகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு சில காலம் ஆகும் என்ற காரணத்தினால், தற்போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு, அதாவது 31.12.2012 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு, ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு, ரேஷன் கார்டுகள் மேலும் ஓராண்டு நீட்டிப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம்

மேலும்...

 எம்.எல்.ஏ.வுக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம் என்பதால் திருமணம் பிடிக்கவில்லை - இளம்பெண் வாக்குமூலம்
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன்.இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் வருகிற 12-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.பண்ணாரி அம்மன்

மேலும்...

 குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.இந்த நிலையில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in