tamilkurinji logo


 

ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு,




செய்திகள் >>> தமிழகம்

ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு

First Published : Thursday , 29th December 2011 08:43:10 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு,

தமிழகத்தில் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி ஜனவரியில் தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் இந்தப் பணி முடிவடையும்.

இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை, மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது. அவ்வாறு புதுப்பிக்கும் போது புழக்கத்திலுள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள உள்தாளின் மேற்பகுதியில் "2012'' என முத்திரையிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

குடும்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் விவரங்களை குடும்ப அட்டைகளில் மேம்படுத்த வேண்டிய தேவை சிலருக்கு ஏற்பட்டு இருக்கலாம். எனவே, குடும்ப அட்டைகளை முத்திரையிட்டு புதுப்பிக்கும் போது, அட்டைகளில் குறிப்பிட்டுள்ள பெயர், முகவரி ஆகியவற்றில் பிழை திருத்தம் அல்லது மாற்றம், நபர் சேர்த்தல், நபர் நீக்கல், எரிவாயு உருளை விவரம் ஆகிய விவரங்களை வாய் மொழியாக சேகரித்து அதன் அடிப்படையில் குடும்ப அட்டை தகவல் தொகுப்பை மேம்படுத்தவும், அதனைத் தொடர்ந்து இந்த விவரங்களை பின்னர் தல விசாரணை செய்து குடும்ப அட்டைகளில் பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி ஜனவரி 2012 மற்றும் பிப்ரவரி 2012 ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது.

எனவே, குடும்பத்தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நியாயவிலை அங்காடிக்கு குடும்ப அட்டையை பொருள்கள் வாங்குவதற்கு மற்றும் புதுப்பிக்க செல்லும் போது அங்காடி பணியாளர்களிடம் தேவையான மேற்கண்ட விவரங்களை வாய் மொழியாக தெரிவித்தால் போதுமானது. அந்த விவரங்கள் குடும்ப அட்டை மற்றும் அங்காடி வழங்கல் பதிவேடு ஆகியவற்றில் குறியீடு எண்ணாக பதிவு செய்யப்பட்டவுடன் அங்காடியின் 2012-ம் ஆண்டைய வழங்கல் பதிவேட்டில் கையொப்பம் இட அல்லது இடது கை பெருவிரல் ரேகை பதிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கையொப்பம் இட்டால் அல்லது கைரேகை பதித்தால் தான் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி முடிவுற்றதாக கருதப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி சேகரிக்கப்படும் இந்த விவரங்களை நியாயவிலை அங்காடியில் பொருள்கள் பெற செல்லும் போது குடும்ப அட்டைதாரர்கள், தாங்களே முன் வந்து, கேட்கும் தகவலை தெரிவித்து, குடும்ப அட்டையை புதுப்பித்து கொள்வதுடன் குடும்ப அட்டை புதுப்பித்தல் பணி செம்மையாக நடைபெற தங்களது ஒத்துழைப்பை தரும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குடும்ப அட்டைகளை ரேஷன் கடைக்கு ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை கொண்டு செல்லலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு, ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு, ரேஷன் கார்டை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - அரசு அறிவிப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in