tamilkurinji logo


 

வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும்,




வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும்

First Published : Monday , 29th April 2013 08:54:30 PM
Last Updated : Monday , 29th April 2013 08:54:30 PM


வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும்,

 நாட்டின் பொதுப் பண வீக்கம் குறைந்துள்ளதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

சென்ற மார்ச் மாதத்தில், நாட்டின் பொது பணவீக்கம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.96 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், இது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டு அளவான, 6.8 சதவீதத்தைவிட குறைவாகும்.

இதை கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், ரிசர்வ் வங்கி வரும், மே மாதம் 3ம் தேதி அறிவிக்க உள்ள அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், வங்கிகளுக்கான "ரெப்போ' வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளது.

ரிசர்வ் வங்கி, கடந்த மார்ச் மாதம், "ரெப்போ' வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்து, 7.5 சதவீதமாக நிர்ணயித்தது. இதையடுத்து, "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம், 6.5 சதவீதமாக குறைந்தது. அதே சமயம், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதம், 4 சதவீதம் என்ற அளவிலேயே விடப்பட்டது.

கடந்த, 2012-13 ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5 சதவீதமாக சரிவடைந்தது. சென்ற நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிலும், பொருளாதார வளர்ச்சி, 4.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து இருந்தது.

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கக்கூடும் என, ரகுராம் ராஜன் தெரிவித்தார்.


வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும், வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும், வங்கிகளுக்கான வட்டிவிகிதம் குறையும்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : ரிசர்வ் பேங்க் கவலை
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வரலாறு காணாத வகையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, கிட்டத்தட்ட, 2 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, முதன் முறையாக, 58.14 ஆக சரிவடைந்தது.இந்நிலையில்,நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு

மேலும்...

 அம்பானி சகோதரர்களின் நிறுவனங்கள் ரூ.1,200 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்
முகேஷ், அனில் அம்பானி சகோதாரர்களின் நிறுவனங்களுக்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று கையப்பம் ஆகியுள்ளது. இவர்களது தந்தை திருபாய் அம்பானி மறைவுக்கு பின் கடந்த 2005-ஆம் ஆண்டில் அம்பானி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு முதன்முறையாக அம்பானி நிறுவனங்களுக்கிடையில்

மேலும்...

 வால்பாறையில் கடும் வறட்சியால் தேயிலை மகசூல் குறைந்து 5,000 பேர் வேலை இழப்பு
கோடை வறட்சியால் தேயிலை மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் வால்பாறையில் 5,000 தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.கோவை மாவட்டம், வால்பாறையில் தனியார் தேயிலை, காபி தோட்டங்கள் 25 ஆயிரம் ஏக்கரும், அரசு தேயிலை தோட்ட கழகத்திடம் ஆயிரம் ஏக்கரும் உள்ளன. 8

மேலும்...

  ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், வரும் 2013–14–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) வளர்ச்சி 6.1–6.7 சதவீதமாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும் என முன்னறிவிப்பு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in