வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

வங்கி கடன் மோசடி விவகாரம்: அருண் ஜெட்லி மகள் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடு தப்புவதற்கு முன் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் மகள் சட்டஉதவி செய்திருப்பதாகவும் அதற்காக பெரும் பணம் பெற்றிருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் ரூ.13 ஆயிரம் கோடி வரை மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பி விட்டனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மோடி தலைமையிலான பாஜ அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று தனது டுவிட்டர் பதிவில் நிதியமைச்சர் அருண்ஜெட்லியை ஆவேசமாக தாக்கினார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட  குற்றவாளிகள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் வெளிநாடு தப்பிப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக அருண்ஜெட்லியின் மகளான வக்கீல், தனது சட்ட நிறுவனத்தின் பணிக்காக பெரும் தொகையை பெற்று இருக்கிறார்.

இதனால்தான் வங்கி மோசடி விவகாரத்தில் நிதியமைச்சர் மவுனம் காத்து வருகிறார். மோசடிக்கு துணை போகும் சட்ட நிறுவனங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வரும் நிலையில், ஜெட்லியின் மகளின் சட்ட நிறுவனத்தில் சி.பி.ஐ. ஏன் சோதனை நடத்தக்கூடாது?. இவ்வாறு ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
https://goo.gl/QdZqF7


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை