tamilkurinji logo


 

வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்,Vallarai keerai Medicinal Uses and Herbal Cure Treatment

Vallarai,keerai,Medicinal,Uses,and,Herbal,Cure,Treatment
வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்

First Published : Thursday , 20th June 2013 12:12:49 AM
Last Updated : Thursday , 20th June 2013 12:12:49 AM


வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்,Vallarai keerai Medicinal Uses and Herbal Cure Treatment

வல்லாரைய அதிகப் பேர்விரும்பிச் உண்பார்கள் காரணம் அதன் சுவை மட்டுல்ல மருத்துவத்திற்கு சிறந்த கீரை வகையாகும்.வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரத்திற்கு இருமுறையேனும் பயன்படுத்த வேண்டும்.

 அதிகாலையில் மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று சாப்பிட்டு நான்கு மணிநேரம் எதையம் உண்ணாமல் பின் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும்.

 வல்லாரை இலைகள் மூன்று, பாதாம் பருப்பு சிறிது, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் ஆகியவற்றை அம்மியில் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் உண்டு வர இதயநோய்கள் நீங்கும்.


 கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து, அதனுடன் 5 வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, சிரங்கு, தோல் நோய்கள், குஷ்டம் போன்றவை விலகும்.


 வல்லாரை இலையைக் காயவைத்து சீரகம், மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு மேம்படும். நினைவாற்றல் பெருகும். மூளை பலம் உண்டாகும்.

 
அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.
 வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் சிறியளவு அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.


 வல்லாரை கற்ப மூலிகைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. வல்லாரைக் கற்பத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, பேதி மற்றும் வாந்தி செய்விக்கும் மருந்துகளால் உடல் சுத்தி செய்துகொள்ள வேண்டும். வேதி பிடித்தல் போன்ற ஆவிக் குளியல் முறைகளால் உடலில் வியர்வையை உண்டாக்கி கழிவுகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.

 கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும்.


நாள்தோறும் ஒவ்வொரு இலை அதிகம் சேர்த்து 21 நாட்கள் சாப்பிட்டு, உப்பில்லாக் கஞ்சியைப் பருகி வர, மூளை பலப்படும். அறிவுக் கூர்மை, அற்புத நினைவாற்றல், சுறுசுறுப்பு போன்றவை உண்டாகும்.

 சாப்பிட ஆரம்பித்த இரண்டு வாரங்களிலேயே நூல்களைப் படைக்கும் சக்தி உண்டாகும். மனசக்தி உண்டாகும். தொடர்ச்சியாக உட்கொண்டு வந்தால் உடல் இறுகும். உடலில் காந்த சக்தி, அழகு உண்டாகும். ஆயுள் விருத்தியாகும்.

 இவ்விலையை அரைத்து படை, வீக்கம், யானைக் கால் வீக்கம், ரணம் இவைகட்கு மேல் பூசுவதால் அதிக நன்மை தரும்.


 வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.


எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.


. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும்.


யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.    


வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்,Vallarai keerai Medicinal Uses and Herbal Cure Treatment வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்,Vallarai keerai Medicinal Uses and Herbal Cure Treatment வல்லாரை கீரையின் மருத்துவ குணங்களும் பயன்களும்,Vallarai keerai Medicinal Uses and Herbal Cure Treatment
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கல்லீரல் கோளாறுகளை போக்கும் பப்பாளி பழம் மருத்துவ குறிப்பு
தேவையான பொருட்கள்:  பப்பாளி பழத்தை   மிக்சியில்   போட்டு   நன்கு  அரைத்து    2 ஸ்பூன்  அளவுக்கு எடுக்கவும். இதனுடன்  அரை   ஸ்பூன்   சீரகப்பொடி சேர்க்கவும். இரண்டும்   சேர்த்து   ஒரு டம்ளர்    நீர்  விட்டு கொதிக்க வைக்கவும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு    வந்தால் 

மேலும்...

 இலைகளின் மருத்துவ குணம்
மூங்கில் இலை சாம்பலில் பல்தேய்த்தால் பற்களில் உள்ள கறை நீங்கும்.துளசி கசாயம் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.தினமும் வாழை இலையில் சாப்பிட்டால் என்றும் இளமையுடன் இருக்கலாம். தோல் பளபளக்கும். பித்தத்தை சமபடுத்தும்.

மேலும்...

 கண்டங்கத்தரியின் மருத்துவ குணம்
இது சளியைக் கரைப்பதோடல்லாமல் நீரைப் பெருக்கும் ஆற்றலுமுள்ளது. வீக்கத்தைக் கரைக்கும் சக்தியும் கண்டங்கத்திரிக்கு உண்டு. மேலும் கப சம்பந்தப்பட்ட காய்ச்சலைத் தணிக்கும்.* கண்டங்கத்திரிச்  செடி முள் நிரம்பியது. பூ நீலநிறமுடையது. காய் சுண்டைக்காயைப் போன்று பச்சையாகவும், பழம் மஞ்சளாகவும், சில வெண்மையாகவும்

மேலும்...

 கீழா நெல்லி மருத்துவ குணம்
 கீழாநெல்லி இலை, கரிசாலங்கண்ணி இலை, தும்பை இலை மூன்றும் சம அளவு எடுத்து அம்மியில் அரைத்துக் காய்ச்சிய பசும் பாலில் பெரியவர்களுக்குப், சிறியவர்களுக்கு, குழந்தைகளுக்குச்  காலையில் மட்டும் ஒரு வாரம் முதல் 10 நாள் தரவும். * உணவு காரம், புளி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in