வால்பாறையில் கடும் வறட்சியால் தேயிலை மகசூல் குறைந்து 5,000 பேர் வேலை இழப்பு

வால்பாறையில் கடும் வறட்சியால் தேயிலை மகசூல் குறைந்து 5,000 பேர் வேலை இழப்பு
கோடை வறட்சியால் தேயிலை மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் வால்பாறையில் 5,000 தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் தனியார் தேயிலை, காபி தோட்டங்கள் 25 ஆயிரம் ஏக்கரும், அரசு தேயிலை தோட்ட கழகத்திடம் ஆயிரம் ஏக்கரும் உள்ளன. 8 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்கள் உட்பட  30 ஆயிரம் பேர் இவற்றில் பணியாற்றுகின்றனர்.  

 தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் புதிய தேயிலை அதிகளவில் விளைவதால் மகசூல் அதிகரிக்கும். அதை பறிக்க தேவையான தொழிலாளர்கள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படும். இதனால் பல இடங்களில் தேயிலை பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதற்கு மாறாக கடும்பனி மற்றும் கோடை காலங்களில் மகசூல் குறையும். இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இருப்பதில்லை.

இக்காலங்களில் நிரந்தர தொழிலாளர்களுக்கு கூடுதல் ஷிப்ட் பணிகள் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது. தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக தற்காலிக தொழிலாளர்கள் படிப்படியாக வேலை இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
https://goo.gl/GKyiKA


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்