tamilkurinji logo


 

விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது,
செய்திகள் >>> தமிழகம்

விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது

First Published : Thursday , 29th December 2011 03:17:40 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது,

மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் முருகேஸ்வரன் (26). இவர் மாதவரம் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட சந்தியாவிடம் (26) (பெயர் மாற்றம்) மிரட்டி மாமூல் வசூலித்து வந்தார்.

இந்நிலையில் சந்தியா மணலி பெரியதோப்பு பகுதிக்கு சென்று அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் போலீஸ்காரர் முருகேஸ்வரன், நண்பர்கள் மகேஸ்வரன், பிரேம்குமார், ஷேக் ஆகியோரை அழைத்துக் கொண்டு சந்தியாவின் வீட்டுக்கு விபசார வேட்டைக்கு சென்றார். அங்கு முருகேஸ்வரனும் மற்ற 2 நண்பர்களும் வெளியில் நிற்க மகேஸ்வரன் மட்டும் சந்தியா வீட்டுக்குள் சென்றார். அப்போது சந்தியாவும் இன்னொரு விபசார அழகியும் வீட்டில் இருந்தனர். அவர்களிடம் மகேஸ்வரன் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் முருகேஸ்வரன் திடீரென வீட்டுக்குள் புகுந்து சந்தியாவை மிரட்டினார். மாதவரத்தை காலி செய்து விட்டு மணலியில் வந்து விபசாரத்தில் ஈடுபடுகிறாயா? என்று கேட்டார். பின்னர் அவர் தொடர்ந்து எனக்கு மாமூல் கொடுக்கா விட்டால் நீ தொழில் செய்ய முடியாது என்று கூறி மிரட்டினார்.

இதுபற்றி சந்தியா மணலி போலீசில் புகார் செய்தார். வடசென்னை இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக விபசார அழகிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டிய போலீஸ்காரரையும் நண்பர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி முருகேஸ்வரனும் அவரது நண்பர்களும் கைதானார்கள். விபசார புரோக்கராக செயல்பட்ட அருண்குமாரும் கைதானார்.

விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது, விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது, விபசார அழகியிடம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர் கைது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண்

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி தற்காலிக நீக்கம்: திமுக அறிவிப்பு
பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in