tamilkurinji logo


 

வில்வம்,
வில்வம்

First Published : Saturday , 17th July 2010 07:30:40 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வில்வம்,


வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்துநோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும்காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜைசெய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு.

இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.

இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு வேர்ப்பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

கற்ப முறைப்படி வில்வத்தின் சமூலத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.

வில்வ கற்பம்

பல்லவம்பூ பிஞ்சின் பழநிரியம்சம் முறையே

வல்லவம் மேகமந்த மாகுன்மம்-செல்லுகின்ற

நோக்மருள் விந்துநட்ட நூறு மகுத்தவர்கட்

காக்கமருள் வில்லுவத்தி லாம்

(அகத்தியர் குணபாடம்)

பொருள் - வில்வத்தளிர் எல்லா மேக நோய்களையும் குணப் படுத்தும்.

வில்வப் பூ- மந்தத்தைக் குணப்படுத்தும்.

பிஞ்சு - குன்மத்தை போக்கும்

பழம் - கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

பிசின் - விந்துவை கெட்டிப் படுத்தி அதன் குறையை நீக்கும்.

வில்வ இலைச் சாறை எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு மண்டலம்காலையும், மாலையும் பத்திய முறைப்படி இறைவனை வணங்கி அருந்தி வந்தால்காமாலை மற்றும் இரத்த சோகையால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

வில்வ இலைச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சுரம், இருமல், தொண்டைக்கரகரப்பு, வாய் குளறல், மயக்கம் தீரும். தொடர்ந்து 40 நாட்கள் கற்பமுறைப்படி அருந்தி வந்தால் மேற்கண்ட பிணிகளிலிருந்து முழு விடுதலை பெறலாம்.

வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.

வில்வ இளம் பிஞ்சை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்துஅருந்தினால் வயிற்றுப்புண், குடல்புண், தொண்டைப் புண் ஆறும். சிறுபிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் நீங்கும்.

வில்வ காயை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும்.

மாதூரத் தாலை மடக்கஞர்போ மாந்தவரா

மாலுரத்தாலை மடிவபோன் - மாலுரம்

(தேரையர் நளவெண்பா)

வில்வ இலை, இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீராக்கி ஒரு மண்டலம் கற்பமுறைப்படி பத்தியம் கடைப்பிடித்து அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.

வில்வ வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு இம்மூன்றையும் சேர்த்துக் காய்ச்சிஎட்டில் ஒன்றாய் ஆன பதத்தில் வடித்து தேன் கலந்து அருந்தினால் கொடியமுப்பிணியும் தீரும்.

வில்வத்தின் கனி, காய், இலை, வேர் முதலானவற்றை மணப் பாகு, ஊறுகாய்,குடிநீர், தைலம் இதில் எதாவது ஒன்று தயாரித்து ஒரு மண்டலம் உட்கொண்டால்உடலுக்கு அழகையும், ஆண்மையையும் கொடுக்கும். வாய் குழறிப் பேசும் தன்மைநீங்கும்.

வில்வம், வில்வம், வில்வம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கொலஸ்ட்ராலைக் குறைக்க
கால்நடை தீவனம் விற்கும் கடைகளில் கிடைக்கும் கோதுமை தவிடை வாங்கி அரவை மில்லில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தினமும் காலை/மாலை இரு வேளை

மேலும்...

 தொண்டை கரகரப்புக்கு ஏல‌க்கா‌ய் மருத்துவம்
இ‌னி‌ப்பு ப‌ண்ட‌ங்க‌ள் செ‌ய்யு‌ம் போது வாசனை‌க்காக ஏல‌க்காயை சே‌ர்‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் ‌நினை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், ஏல‌க்கா‌யி‌ல் ப‌ல்வேறு அ‌ரிய குண‌ங்க‌ள் உ‌ள்ளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு‌ச்ச‌த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல‌க்கா‌யி‌ல் கலந்துள்ளன. அடித்தொண்டை

மேலும்...

 உடல் எடை குறைய‌
வாழைத் தண்டைச் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் மிளகு,சீரகம்,பூண்டு,சிறிது எலுமிச்சம் பழச்சாறும் கலந்து மூடிக் கொதிக்க வைத்து உப்பிட்டு, முறைப்படி தாளித்துக் கொள்ளவும். இதனைக் காலை,பகல் உணவுக்கு முன் அருந்தவும்.இவ்வறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் எடை வெகுவாக குறையும்.

மேலும்...

 வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா? வெள்ளை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in