விவசாயிகளுக்காக போராடினால் நக்சலைட்டா? பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி

விவசாயிகளுக்காக போராடினால் நக்சலைட்டா? பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி
கோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது- நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

பியூஸ் மனுஷை கடத்தி சென்றது போல அவரை அழைத்து சென்று கைது செய்துள்ளனர்.\

கைது செய்யப்பட்ட பின்னர் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்கவும் காவல் துறை அனுமதிக்கவில்லை.

பியூஸ் மனுஷ் செல்போனை இதுவரை காவல் துறையினரே வைத்துள்ளனர். செல்போனை தங்களிடம் போலீசார் கொடுக்க மறுக்கின்றனர்.

சேலம் - சென்னை சாலை குறித்து தனது கருத்தை பியூஷ் சொல்கின்றார். அவர் மக்களை தூண்டிவிடவில்லை.

தண்ணீர், நிலம், சுத்தமான காற்று மற்றும் விவசாயிகளுக்காக போராடினால், குரல் கொடுத்தால் அவர்களை மாவோயிஸ்ட், நக்சல் என தமிழக அரசு சொல்லுமா?

 8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதை கேள்வி எழுப்பியதால் பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

பியூஸ் மனுஷ் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை முயல்கின்றது.


அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாப்பது மட்டும் காவல் துறையின் பணியா? மக்களுக்கு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொடுப்பதும், அறியாமையை போக்குவதும் போராட்டத்தை தூண்டுவதா?

பியூஸ்மனுஷ் கைது சம்பவத்தில் அரசு, காவல் துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன.

 உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


https://goo.gl/7d2CYr






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது