வீட்டிற்கு ஒரு வங்கி கணக்கு - மத்திய அரசு வலியுறுத்தல்

வீட்டிற்கு ஒரு வங்கி கணக்கு - மத்திய அரசு வலியுறுத்தல்
அரசு திட்டங்கள் வாயிலான மானியம் பொதுமக்களுக்கு நேரில் சென்றடையும் வகையில், வீட்டிற்கு ஒரு வங்கி கணக்கை துவங்க நடவடிக்கை எடுக்கும்படி பொது துறை வங்கிகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தமுள்ள 24.69 கோடி குடும்பங்களில் 58.7 சதவீதத்தினரே (14.48 கோடி) வங்கி சேவை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இருப்பினும் பல குடும்பங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட சேமிப்பு வங்கி கணக்குகளை கொண்டுள்ளதால் வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குடும்பங்களின் எண்ணிக்கையை விட 100 முதல் 140 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. ஆயினும், இன்னும் சுமார் 10 கோடி குடும்பங்கள் வங்கி சேவையை பெறாமல் உள்ளனர் என்பதே உண்மை நிலையாக உள்ளது. எனவே, வீட்டிற்கு ஒரு வங்கி கணக்கை தொடங்குவதை இலக்காக கொண்டு செயல்படும்படி வங்கிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மின்னணு பண பரிமாற்ற வசதியுள்ள வங்கிகளில் மட்டுமே இவ்வகை கணக்குகள் தொடங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவ்வசதி அமலுக்கு வரும் நிலையில், 32 திட்டங்கள் வாயிலாக அரசு வழங்கும் மானியங்கள் பயனீட்டாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதன் மூலம் மானியங்கள் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
https://goo.gl/Tq25Ua






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்