tamilkurinji logo


 

வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்,How to Lose Weight Fast at Home in a Monthudal edai kuraiyaweight loss diet in tamiludal edai kuraiya simple exercises in tamil

How,to,Lose,Weight,Fast,at,Home,in,a,Monthudal,edai,kuraiyaweight,loss,diet,in,tamiludal,edai,kuraiya,simple,exercises,in,tamil,




வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்

First Published : Monday , 4th August 2014 12:16:17 AM
Last Updated : Monday , 4th August 2014 12:16:17 AM


வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்,How to Lose Weight Fast at Home in a Monthudal edai kuraiyaweight loss diet in tamiludal edai kuraiya simple exercises in tamil

உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் சிலருக்கு எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம்மிற்க்குச் செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும்தான் செல்வார்கள்.

 அதன் பின் அதுவும் இல்லை. சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும்.

அத்தகையவர்களுக்காக உடல் எடையை எளிதில் அன்றாட செயல்களின் மூலம் எப்படி குறைப்பது என்று எளிமையான சில வழிகள்


அனைத்து வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், மாடிப்படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இதுவும் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.


வீட்டிலோ அல்லது வேறு எங்கோ, கீழே உட்கார்ந்தால் எழும்போது, கைகளை கீழே ஊன்றியோ அல்லது வேறு எங்காவது பிடித்துக் கொண்டோ எழ வேண்டாம். இவ்வாறு எழுவதும் ஒருவிதமான உடற்பயிற்சிதான்.


தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், தரையில் படுத்துககொண்டு டி.வி பார்க்கும்போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும்.


தரையில் குப்புற படுத்துக் கொண்டு, கைகளை தரையில் பதித்து, உடலை மேலே தூக்கிக் கொண்டு, பின் மெதுவாக மூக்கை தரையில் தொட்டு, பின் மீண்டும் உடலே மேலே தூக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், கைகள் மற்றும் மார்புகள் நன்கு வலுவோடு இருக்கும்.


ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியேதான் செல்ல வேண்டும் அல்லது உடற்பயிற்சி இயந்திரங்கள் மூலம்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.


உடல் எடையைக் குறைக்க சிறந்த வழியென்றால் அது நடனம்தான். ஆகவே வீட்டில் சாதாரணமாக வேலையின்றி இருக்கும்போது, நல்ல குத்துப்பாட்டை போட்டு, நடனம் ஆடலாம்.

சிறுவயதில்தான் குதிக்கும் பயிற்சியை மேற்கொண்டிருப்போம். ஆனால் அத்தகைய குதிக்கும் பயிற்சியை செய்தாலும், உடலில் ஆங்காங்கு ஒட்டியிருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, எடையை குறைக்கும்

இதுவும் ஒரு சிறுவயது விளையாட்டுதான். இதற்கு வெறும் கயிறு மட்டும் போதுமானது. ஆகவே வீட்டில் ஸ்கிப்பிங் கயிறு இருந்தால், அதனை நேரம் கிடைக்கும் போது, தோட்டம் அல்லது மாடியில் விளையாடலாம்.

இவ்வாறு செய்து வந்தால்   நாம் வீட்டில் இருந்தே உடல் எடை குறைத்து உடலை ஆரோக்கியமாகவும் சிலிம் பியூட்டியாகவும் வைத்த கொள்ளலாம்.

வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்,How to Lose Weight Fast at Home in a Monthudal edai kuraiyaweight loss diet in tamiludal edai kuraiya simple exercises in tamil வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்,How to Lose Weight Fast at Home in a Monthudal edai kuraiyaweight loss diet in tamiludal edai kuraiya simple exercises in tamil வீட்டில் இருந்தே உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்,How to Lose Weight Fast at Home in a Monthudal edai kuraiyaweight loss diet in tamiludal edai kuraiya simple exercises in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in