tamilkurinji logo
 

வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவி படுகொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

வீட்டில் தனியாக இருந்த கணவன்-மனைவி படுகொலை

First Published : Friday , 29th December 2017 08:05:59 PM
Last Updated : Friday , 29th December 2017 08:05:59 PM


வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

திருப்பூர் அவினாசி பாளையம் அருகே உள்ள நாச்சிபாளையம் நத்தகாட்டுதோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 70). இவரது மனைவி தெய்வாத்தாள் (வயது 65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இவர்கள் தங்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே தங்கினர். நேற்று இரவும் கணவன்- மனைவி 2 பேரும் வழக்கம் போல் தூங்கினர்.

நள்ளிரவு 12 மணியளவில் இவர்களது வீட்டு கதவு திறந்தநிலையில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

அப்போது தெய்வாத்தாள் வீட்டு வாசலிலும், முத்துக்குமாரசாமி வீட்டுக்குள்ளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது கணவன்-மனைவி 2 பேரும் உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோக்கள் திறக்கப்படாத நிலையில் இருந்தது. அதோடு தெய்வாத்தாள் அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருந்தது.

எனவே நகை-பணத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்க யாராவது கூலிப்படையை ஏவி இவர்களை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் துப்பறியும் மோப்பநாயும் கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
வீட்டில் தனியாக இருந்த  கணவன்-மனைவி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை தொழிலதிபர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு நிலக்கரி கொள்முதலில் ரூ.487 கோடி முறைகேடு
இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ. 487 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர், என்.டி.பி.சி. எம்.எம்.டி.சி. ஏ.பி.சி.பி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு

மேலும்...

 2 பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
 பள்ளிக்கரணை அருகே மனைவியுடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் கணவன் காணாமல் போனதால் மனமுடைந்த பெண் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணை பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்

மேலும்...

 மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்கா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவரது மனைவி பார்வதி (74). இவர்களுக்கு இந்திராணி (45) என்ற மகளும், பன்னீர் (40) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து ஈரோட்டில் வசித்து வருகிறார்.

மேலும்...

 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in