வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்பு

வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்பு
தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பீ) முக்கிய கடனிற்கான வட்டியை 10.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று இவ்வங்கியின் தலைவர் ஆர்.வி.வர்மா தெரிவித்தார்.

தேசிய வீட்டு வசதி வங்கி, வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிறுவனங்கள் திரட்டும் கடனில் சராசரியாக 25-30 சதவீதம் என்.எச்.பீ.யால் வழங்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இது 60 சதவீதமாக உள்ளது. எனவே, முக்கிய கடனுக்கான வட்டியை என்.எச்.பீ. குறைத்ததையடுத்து, வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.

கடந்த நிதி ஆண்டில் என்.எச்.பீ. ரூ.14,454 கோடிக்கு கடன் வழங்கி உள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். அந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் ஈட்டிய லாபம் 39 சதவீதம் அதிகரித்து ரூ.387 கோடியாக உயர்ந்துள்ளது.

பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 17-ந் தேதி வெளியிட்ட பணக் கொள்கை ஆய்வு அறிக்கை யில், வங்கிகள் திரட்டும் டெபாசிட்டுகளில் குறிப்பிட்ட சதவீதத்தை பாரத ரிசர்வ் வங்கியில் வைப்பதற்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. இதனால், வங்கி களுக்கு கூடுதலாக ரூ.17,000 கோடி கிடைக்கும். எனவே, வங்கிகளால் பொதுமக்களுக் கும், நிறுவனங்களுக்கும் அதிக அளவில் கடன் வழங்க முடியும்.

ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்ததும் பாரத ஸ்டேட் பேங்க் `பேஸ் ரேட்' எனப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை 10 சதவீதத்திலிருந்து 9.75 சதவீதமாக குறைத்தது. இந்த வட்டி விகிதம் அனைத்து வங்கிகளையும் விட குறைவானதாகும்.

ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை குறைத்ததையடுத்து, பாரத ஸ்டேட் பேங்கிற்கு கூடுதலாக ரூ.2,500 கோடி கிடைக்கும். இதனை கடனாக வழங்குவதால் இவ்வங்கிக்கு ரூ.200 கோடி வட்டி வருவாய் கிடைக்கும். இந்த நிலையில், பல வங்கிகளும் அடிப்படை வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
https://goo.gl/dbL1fA






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்