tamilkurinji logo


 

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு,




செய்திகள் >>> தமிழகம்

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு

First Published : Tuesday , 27th December 2011 08:45:26 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு,

மே பதினேழு இயக்கம் சார்பில் சென்னை மெரினாவில், நேற்று முன் தினம் மாலை முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி போலீஸ் தடையை மீறி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், தாமரை மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உள்ளிட்டோர் மீது மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வலு சேர்க்கவும், இந்த பிரச்சினையில் தமிழகத்தில் நடக்கும் வன்முறைகளை தடுத்து பொதுஅமைதி நிலவிட வலியுறுத்தியும், மெரினாவில் சர்வீஸ் ரோட்டில் அமைதிப்பேரணி நடத்தப்போவதாக மே பதினேழு இயக்கம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. அமைதிப் பேரணி என்று கேட்டதால் நல்லெண்ண நோக்கத்தோடு வாய்மொழியாக பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டது.

ஆனால் அமைதிபேரணி என்று சொல்லி விட்டு, பொதுக்கூட்டம் போல நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மெரினாவில் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சொன்னதற்கு மாறாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் வழக்கு போடப்பட்டுள்ளது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு, வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு, வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான் மீது வழக்குப்பதிவு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in