வைர வியாபாரி மகளுடன் ரிலையன்ஸ் அதிபர் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம்

வைர வியாபாரி மகளுடன் ரிலையன்ஸ் அதிபர் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம்
நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், மிகப்பெரிய வைர வியாபாரியான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி (வயது26). இவர் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆகாஷ் அம்பானிக்கும், ரோஸி புளூ டைமண்ட்ஸ் அதிபர் ருஷெல் மேத்தா, மோனா மேத்தா தம்பதியின் 3வது மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் இடையே காதல் இருந்து வந்தாக தகவல்கள் வெளியாகின.

ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும், மும்பையில் உள்ள அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரின் பள்ளிக் காலத்தில் இருந்தே இரு குடும்பத்தாருக்கும் நன்கு பழக்கம் என்பதால் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆகாஷ் அம்பானி, ஸ்லோகா மேத்தாவின் திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் நேற்று நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்களும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.

எனினும் சமூகவலைதளங்களில் இதுதொடர்பான தகவல்களும், புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இவர்களது திருமணம், திருமணம் டிசம்பர் மாதத்தில் நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்லோகா மேத்தா அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயன்ஸில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தற்போது ரோஸி புளூ அறக்கட்டளை அமைப்பில் நிர்வாக இயக்குநராக ஸ்லோகா மேத்தா செயல்பட்டு வருகிறார்.
https://goo.gl/fpNQtV


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை