tamilkurinji logo


 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு,Sterlite Copper permanently closed in Tamil Nadu, says state govt ...

Sterlite,Copper,permanently,closed,in,Tamil,Nadu,,says,state,govt,...




செய்திகள் >>> தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

First Published : Monday , 28th May 2018 06:07:00 PM
Last Updated : Monday , 28th May 2018 06:07:00 PM


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு,Sterlite Copper permanently closed in Tamil Nadu, says state govt ...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துண்டிக்கப்பட்ட இணையதள சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.


அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.  துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்கள் 47 பேரையும் தனித்தனியாக  சந்தித்து ஆறுதல் கூறினர்.


அவர்களுக்கு நிவாரண தொகை காசோலையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  தலைமைச்செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர்.


இந்த ஆலோசனைக்கூட்டத்தில், துணை முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்ட மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு,Sterlite Copper permanently closed in Tamil Nadu, says state govt ... ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு,Sterlite Copper permanently closed in Tamil Nadu, says state govt ... ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு,Sterlite Copper permanently closed in Tamil Nadu, says state govt ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in