ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை: தூத்துக்குடியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை: தூத்துக்குடியில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது என, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (திங்கள்கிழமை) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் அவர் உடன் சென்றிருந்தனர்.

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “தூத்துக்குடியில் நடைபெற்ற இத்துயர சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம். அவர்கள் உடல் நலம் தேறி வருவார்கள் என தெரிவிக்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அந்த ஆலை மூடப்பட்டது. அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலையை திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அப்போதையை முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்த போது அதற்கு தமிழக அரசு மறுத்து விட்டது. எனவே அந்த ஆலை மூடப்பட்டது.

ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற பொதுமக்களின் முக்கிய கோரிக்கைக்கு ஏற்ப, தற்போது அந்த ஆலை மூடப்பட்டிருக்கிறது. நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் எடுக்கும்.

தூத்துக்குடியில் அமைதி திரும்பியிருக்கிறது. இந்த அமைதி நிலைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

தூத்துக்குடியில் தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. துப்பாக்கிச் சூட்டில் உறுதியாக 13 பேர் தான் இறந்திருக்கின்றனர். காயமடைந்த அனைவருக்கும் நிதி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.

அதிமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன” என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
https://goo.gl/LGGVYM


03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது