ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

ஸ்டெர்லைட் மேல்முறையீடு - தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை அடுத்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆலையை மூடும் தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்க தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உடனடியாக அனுமதி தர முடியாது என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டது வேண்டும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், புகையால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆலையின் பராமரிப்பை அரசு மேற்கொண்டு வருவதால் பாதிப்பு ஏற்படும் என்பதால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தீர்ப்பாய நீதிபதி ஜவாத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணை நடத்தி இந்த உத்தரவை வழங்கியது. மேலும் ஜூலை 18-க்குள் தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
https://goo.gl/WcozUS






03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி

25 Dec 2018

வாட்ஸ்-அப் உரையாடல் ,இன்ஸ்பெக்டர் பிடியில் இருக்கும் மனைவியை மீட்டுத்தாருங்கள்” போலீசில் கணவர் புகார்

24 Dec 2018

கிளிஜோதிடர் நடுரோட்டில் வெட்டிக்கொலை தன்னுடன் வாழ்ந்த பெண்ணைப் பிரித்ததால் ஆத்திரம்: நோட்டீஸில் தகவல்

21 Dec 2018

தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 24ந்தேதி கூடுகிறது