ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல் அமைச்சர் அறிவிப்பு

ஹஜ் பயணத்துக்கு ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்: முதல் அமைச்சர் அறிவிப்பு
புனித தலமான மெக்காவிற்கு வருடந்தோறும் பக்ரீத் பண்டிகை சமயத்தில் முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை செல்வது வழக்கம். இந்த புனித பயணத்திற்காக முஸ்லீம்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது. பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முஸ்லீம்களுக்கு கிடைத்து வந்த இந்த மானியத்தை கடந்த ஜனவரியில் மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது.

இந்த ஹஜ்மானியத்தை தமிழக முஸ்லீம் யாத்திரீகர்களுக்காக மாநில அரசு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கடந்த 7 ஆம் தேதி தமிழக வஃக்பு வாரியம் சார்பில் சென்னையில் ரம்ஜான் நோன்பு இப்தார் விருந்து நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் வஃக்பு வாரியம் சார்பில் இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டபேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல் அமைச்சர் பழனிசாமி, ஹஜ் பயணத்துக்கு ரூ. 6 கோடி மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.  அரசின் அறிவிப்பு மூலம், 2018-19 ஆம் ஆண்டில்  3,828 ஹஜ் பயணிகள் பயன் அடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://goo.gl/enuUrF






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்