tamilkurinji logo


 

‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு,sensex

sensex
‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு

First Published : Wednesday , 27th February 2013 10:30:44 PM
Last Updated : Wednesday , 27th February 2013 10:30:44 PM


 ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு,sensex

பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், வரும் 2013–14–ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டீ.பி) வளர்ச்சி 6.1–6.7 சதவீதமாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதன்கிழமை அன்று பங்கு வியாபாரத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் அதிகரித்தது.

இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறைகளை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வலிமையில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் ஜனவரி மாதத்தில் வீடுகள் விற்பனை 4½ ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. இதனையடுத்து, அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பார்தி ஏர்டெல், எல் & டி, மகிந்திரா & மகிந்திரா, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் ஆட்டோ, பீ.எச்.இ.எல்., டாட்டா ஸ்டீல், என்.டி.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட 22 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம், கெயில் இந்தியா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட எட்டு நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 137.27 புள்ளிகள் உயர்ந்து 19,152.41 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,213.02 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,997.82 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 35.55 புள்ளிகள் உயர்ந்து 5,796.90 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,818.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,749.70 புள்ளிகளுக்கும் சென்றது.

 ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு,sensex  ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு,sensex  ‘சென்செக்ஸ்’ 137 புள்ளிகள் உயர்வு,sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in