tamilkurinji logo


 

‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் உயர்வு,sensex

sensex




‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் உயர்வு

First Published : Wednesday , 23rd January 2013 10:34:32 PM
Last Updated : Wednesday , 23rd January 2013 10:34:32 PM


‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் உயர்வு,sensex

பங்கு வர்த்தகம் புதன்கிழமை அன்று ஓரளவு நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் அதிகரித்து மீண்டும் 20,000 புள்ளிகளை தாண்டியது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வருவாயை அதிகரிக்கும் வகையில் வருமான வரி விதிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார். இது, பங்கு வர்த்தகத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்தது.

பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளன என்ற செய்தி வெளியானதையடுத்து, இந்த நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

மூன்றாவது காலாண்டில் ‘புளுசிப்’ நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருந்ததையடுத்து, பொறியியல் துறையைச் சேர்ந்த எல்&டி, பீ.எச்.இ.எல்., சீமென்ஸ் மற்றும் ஏ.பீ.பீ. ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. பாரத ஸ்டேட் வங்கி, எச்.டீ.எஃப்.சி. பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய வங்கி பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. மேலும், ஐ.டி. துறையைச் சேர்ந்த பல நிறுவன பங்குகளையும் முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கினர்.

‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் பார்தி ஏர்டெல், டாட்டா பவர், ஐ.டி.சி., ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட 16 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம், இந்துஸ்தான் யூனிலீவர், டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, கெயில் உள்ளிட்ட 14 நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இல்லையென்றால் பங்கு வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும்.

வர்த்தகம் முடியும்போது ‘சென்செக்ஸ்’ 45.04 புள்ளிகள் அதிகரித்து 20,026.61 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 20,058.07 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 19,920.91 புள்ளிகளுக்கும் சென்றது.

தேசிய பங்கு சந்தை

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 5.80 புள்ளிகள் உயர்ந்து 6,054.30 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 6,069.80 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 6,021.15 புள்ளிகளுக்கும் சென்றது.

‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் உயர்வு,sensex ‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் உயர்வு,sensex ‘சென்செக்ஸ்’ 45 புள்ளிகள் உயர்வு,sensex
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'
தொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் உயர்ந்து 29,593 புள்ளிகளாக நிறைவடைந்தது.

மேலும்...

 புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
புதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை அடைந்தன.இன்று காலை சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் உயர்ந்து

மேலும்...

 தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின்

மேலும்...

 வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது
லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 344.19 புள்ளிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in