tamilkurinji logo


 

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்,UP By Election Results 2018 Live: Gorakhpur and Phulpur Elections ...

UP,By,Election,Results,2018,Live:,Gorakhpur,and,Phulpur,Elections,...




செய்திகள் >>> இந்தியா

இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

First Published : Wednesday , 14th March 2018 08:07:23 PM
Last Updated : Wednesday , 14th March 2018 08:07:23 PM


இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்,UP By Election Results 2018 Live: Gorakhpur and Phulpur Elections ...

புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர்.

எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் கோரக்பூர் தொகுதி மற்றும் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி  அமோக வெற்றி பெற்றது.

உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு, இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

“ புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

 இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும். சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்வாதி கூட்டணியை குறைத்து மதிப்பிட்டதும் தோல்விக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.


இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்,UP By Election Results 2018 Live: Gorakhpur and Phulpur Elections ... இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்,UP By Election Results 2018 Live: Gorakhpur and Phulpur Elections ... இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்,UP By Election Results 2018 Live: Gorakhpur and Phulpur Elections ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 மும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கி மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in