காதலனுடன் விஷம் குடித்து மணமகள் தற்கொலை

காதலனுடன் விஷம் குடித்து மணமகள் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறொருவருடன் 2 நாட்களில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ததால் மணமகளும், அவரது காதலனும் தனித்தனியாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல்அச்சமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் பாரதி (20). 8ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

அதேபோல் கீழ்அச்சமங்களம் கிராமத்தை சேர்ந்த நவநீதம் மகன் கார்த்தி (21).


இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு பாரதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் கார்த்தியை சந்திக்க முடியாதபடி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
ஆனாலும் விடுமுறை நாட்களில், சொந்த ஊருக்கு வரும் பாரதி, காதலன் கார்த்தியை சந்தித்து பேசி வந்தார். இதனை அறிந்த பெற்றோர் உறவினர் ஒருவருக்கு பாரதியை வரும் 25ம் தேதி திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர்.

இந்நிலையில், உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வழங்குவதற்காக நேற்று பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். வீட்டில் பாரதி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அதேபோல் கார்த்தியும் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஏற்கனவே பேசிக்கொண்டபடி நேற்று மாலை இருவரும் அவரவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.


வெளியில் இருந்து திரும்பிவந்த பாரதியின் பெற்றோர், மயங்கி கிடந்த மகளை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல் கீழ்அச்சமங்களத்தில் தனது வீட்டில் மயங்கிய கிடந்த கார்த்தியை உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்தனர்.
https://goo.gl/WikuPM


13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்

10 Dec 2018

பெண்கள் பாதுகாப்புக்காக \"181\" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

01 Nov 2018

ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்

01 Nov 2018

உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: 800 அடி மலை உச்சியில் இருந்து விழுந்த ஜோடி மரணம்