tamilkurinji logo


 

கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்,Delhi School Locks Up 16 KG Students For Hours In The Basement ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Delhi,School,Locks,Up,16,KG,Students,For,Hours,In,The,Basement,...tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்

First Published : Thursday , 12th July 2018 12:07:32 PM
Last Updated : Thursday , 12th July 2018 12:07:32 PM


கல்வி கட்டணம் செலுத்தாத  16 குழந்தைகள் பாதாள அறையில்  சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்,Delhi School Locks Up 16 KG Students For Hours In The Basement ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.

இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து தனியாக பிரித்தனர்.

பின்னர் அவர்களை பள்ளியில் உள்ள பாதாள அறையில் அடைத்து வைத்தனர். சுமார் 5 மணி நேரம் அந்த அறையிலேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை.

பாதாள அறையில் அடைத்து வைத்திருந்ததால் பீதியில் அந்த மாணவிகள் அழுதபடி இருந்தனர். மாலையில் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக அவர்களுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர்.

அப்போது வழக்கமாக இருக்கும் இடத்தில் தங்களது குழந்தைகளை காணவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, கல்வி கட்டணம் செலுத்தாததால் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உடனே பெற்றோர்கள் அங்கு ஓடி சென்றார்கள். குழந்தைகள் பரிதவிப்பான நிலையில் இருந்ததை பார்த்ததும் கண் கலங்கினார்கள். பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகள் பாதாள அறையில் அடைக்கப்பட்டு இருந்ததை சிலர் செல்போனில் படம் பிடித்து டி.வி.க்களுக்கு அனுப்பினார்கள். உடனே அது உள்ளூர் டி.வி.க்களில் ஒளிபரப்பப்பட்டது.

அந்த காட்சிகளை பார்த்த பலரும் ஆத்திரத்தில் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசாரும் அங்கு விரைந்து வந்தார்கள்.

பள்ளி நிர்வாகத்தினர் மீது சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அடைத்து வைக்கப்பட்ட மாணவிகளில் சிலர் ஏற்கனவே கல்வி கட்டணத்தை செலுத்தி இருந்தார்கள். ஆனால், தவறுதலாக அதிலும் சில குழந்தைகளை பாதாள அறையில் அடைத்து வைத்திருந்தனர்.


கல்வி கட்டணம் செலுத்தாத  16 குழந்தைகள் பாதாள அறையில்  சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்,Delhi School Locks Up 16 KG Students For Hours In The Basement ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கல்வி கட்டணம் செலுத்தாத  16 குழந்தைகள் பாதாள அறையில்  சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்,Delhi School Locks Up 16 KG Students For Hours In The Basement ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கல்வி கட்டணம் செலுத்தாத  16 குழந்தைகள் பாதாள அறையில்  சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்,Delhi School Locks Up 16 KG Students For Hours In The Basement ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்
பா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு

மேலும்...

 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந்

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in