tamilkurinji logo


 

15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம்,




செய்திகள் >>> இந்தியா

15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம்

First Published : Saturday , 20th February 2010 09:36:45 AM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம்,

22 வயது ஆசிரியை, 15 வயது மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்ட சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோமட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ரம்யா (22). அனுமகொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நாகேசுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.

இவர்களது காதல் வீடுகளுக்குத் தெரிய வர இரு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். இது முறையல்ல என்று கூறி காதலைத் தடுத்தனர்.

இந் நிலையில் கடந்த 15ம்தேதி ரம்யாவும், நாகேஷும் வீட்டை விட்டு வெளியேறினர். மறுநாள் யாதகிரி குட்டா பகுதியில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்தனர். பின்னர் மடி கொண்டா கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

இதையறிந்த நாகேஷின் உறவினர்கள் அங்கு சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று மடிகொண்டா போலீசில் சரணடைந்தனர்.

நாகேஷின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், 15 வயதே ஆன எங்களது மகன் நாகேஷை ஆசிரியை ரம்யா மயக்கி கெடுத்துவிட்டார். நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை நஞ்சை விதைத்துள்ளார். மைனர் வயதுடைய என் மகனை கடத்தி திருமணம் செய்த ரம்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகேஷை அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் நான் ரம்யாவுடன்தான் வாழ்வேன். எங்களை பிரித்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினான். இருந்தாலும் விடாமல் காரில் ஏற்றி அவனை கூட்டிக் கொண்டு போய் விட்டனர் பெற்றோர்.

ரம்யாவும் கதறி அழுதார். நாகேஷை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாகேஷை என்னை விட்டு பிரித்தாலும், அவன் கட்டிய தாலியை நான் கழற்றமாட்டேன். கடைசி வரை என் கணவன் நாகேஷ்தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

நாகேசுக்கு 18 வயதானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். அவன் என்னைத் தவிர வேறு பெண்ணை திருமணம் செய்யமாட்டான். அதுவரை காத்திருப்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில், ஆந்திர மாநில மனித உரிமை கமிஷன் ஆணைய தலைவர் சுபாஷன் ரெட்டி, ஆசிரியை-மாணவ `தம்பதி'யுடன், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த கோவில் குருக்களையும் கமிஷன் முன்பு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். பத்திரிகை செய்தியின் அடிப்படையில், வாரங்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்து இருக்கிறார்.

"இந்த ஆசிரியையின் செயல் ஒழுக்கக்கேடானது மட்டுமின்றி, குழந்தை திருமண சட்டத்தை அப்பட்டமாக மீறிய குற்றமாகும். சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளின் அலட்சிய போக்கை இந்த சம்பவம் காட்டுவதாக" அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம், 15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம், 15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை ஓட்டம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கடத்திச் சென்று தொண்டையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, உடலை வீசிவிட்டு சென்றுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் சில

மேலும்...

 தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை
தெலுங்கானா மாநிலத்தில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை மருமகனை கவுரவ கொலை செய்வதற்கு கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசியது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரியாளகுடா பகுதியை சேர்ந்தவர் பிரனய்குமார் (வயது22). இருவரும் அதே

மேலும்...

 பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்
பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள், அவர்களை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார், ஆனால் என் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறியுள்ளார்.ஹரியாணா மாநிலம் கைரனாவில் நேற்று கோச்சிங் வகுப்பு

மேலும்...

 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்
மத்தியப் பிரதேச போலீஸ் துறைக்குச் சவால் அளித்த 33 லாரி ஓட்டுநர்களைக் கொலை செய்த சீரியல் கில்லர் ஆதேஷ் கம்ரா, தன் தந்தை தன்னிடத்தில் அன்பே காட்டியதில்லை, கொடுமைப் படுத்தினார், அதனால் என் மனதிலும் குரூரமான எண்ணங்கள் விதைக்கப்பட்டது என்று புதனன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in