19 மாதங்களுக்கு பின் முதல் முறையாக சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்வு

19 மாதங்களுக்கு பின் முதல் முறையாக சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்வு
பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று விறுவிறுப்பாக இருந்தது. 19 மாதங்களுக்கு பின் முதல் முறையாக சென்செக்ஸ் 329 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்தது.

பல்பொருள் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இதனால் பாராளுமன்றம் இனி சீராக நடைபெறும் என்ற நம்பிக்கையும், சீர்திருத்த நடவடிக்கைகள் மீண்டும் உத்வேகம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. மேலும் சர்வதேச அளவிலும் பங்கு வர்த்தம் நன்றாக இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உற்சாகம் காரணமாக பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்கு சந்தையில் நடுத்தர நிறுவனங்களின் குறியீட்டு எண் 1.39 சதவீதம் உயர்ந்தது. சிறிய நிறுவனங்கள் குறியீட்டு எண் 0.52 சதவீதம் அதிகரித்தது. இச்சந்தையில் ரியல் எஸ்டேட், வங்கி, மோட்டார் வாகனம், பொறியியல் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எனினும் தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

நிஃப்டியை கணக்கிட உதவும் 50 நிறுவனங்களில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிப் பங்கின் விலை அதிகபட்சமாக 4.84 சதவீதம் உயர்ந்தது. டாட்டா மோட்டார்ஸ் பங்கின் விலை 4.52 சதவீதமும், ஏஷியன் பெயிண்ட்ஸ் பங்கின் விலை 4.51 சதவீதமும் அதிகரித்தது. பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 4.16 சதவீதம் ஏற்றம் கண்டது. சிப்லா நிறுவனப் பங்கின் விலை 4.06 சதவீதம் உயர்ந்தது. எனினும் இன்ஃபோசிஸ் பங்கின் விலை 1.44 சதவீதம் சரிவடைந்தது. மாருதி சுசுகி பங்கின் விலை 1.01 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 0.84 சதவீதமும், பீ.எச்.இ.எல். பங்கின் விலை 0.71 சதவீதமும், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் பங்கின் விலை 0.65 சதவீதமும் குறைந்தது.
வர்த்தகம் முடியும்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 328.83 புள்ளிகள் உயர்ந்து 19,170.91 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 19,205.33 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 18,873.63 புள்ளிகளுக்கும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் மிக நன்றாக இருந்தது. இச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 97.55 புள்ளிகள் உயர்ந்து 5,825 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,833.50 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,736.10 புள்ளிகளுக்கும் சென்றது. இங்கு 905 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 619 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தும் காணப்பட்டது.
https://goo.gl/tnNJb1






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்