tamilkurinji logo


 

200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து,




200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து

First Published : Friday , 13th July 2012 08:47:56 PM
Last Updated : Friday , 13th July 2012 08:47:56 PM


200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து,

செல்போனில் தினசரி 200 எஸ்எம்எஸ் மட்டுமே அனுப்பலாம் என்ற டிராய் நிர்ணயித்த உச்ச வரம்பை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனால், இனி எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பலாம். செல்போனில் ரியல் எஸ்டேட் முதல் உடல் எடை குறைப்பு வரை டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் எஸ்எம்எஸ் தொல்லை அதிகரித்து வந்தது. இதை தடுக்க தினசரி அதிகபட்சமாக 100 எஸ்எம்எஸ் வரை மட்டுமே அனுப்பலாம் என்ற உச்ச வரம் பை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த ஆண்டு அறிவித்தது. அது மிக குறைவான எண்ணிக்கை என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து, கடந்த நவம்பரில் எஸ்எம்எஸ் உச்ச வரம்பை 200 ஆக டிராய் உயர்த்தியது. எனினும், இது தனிநபரின் கருத்து பரிமாற்றம், பேச்சுரிமையை பாதிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாமலும் இருப்பதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது விளக்கம் அளிக்க டிராய், மத்திய அரசுக்கு டிசம்பர் 6ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தனிநபர் அனுப்பும் தினசரி 200 எஸ்எம்எஸ் உச்ச வரம்பு ரத்து செய்யப்படுவதாகவும், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட உச்ச வரம்பு தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து, 200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து, 200 எஸ்எம்எஸ் உச்சவரம்பு ரத்து,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அம்பானி சகோதரர்களின் நிறுவனங்கள் ரூ.1,200 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்
முகேஷ், அனில் அம்பானி சகோதாரர்களின் நிறுவனங்களுக்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ.1,200 கோடிக்கு ஒப்பந்தம் ஒன்று கையப்பம் ஆகியுள்ளது. இவர்களது தந்தை திருபாய் அம்பானி மறைவுக்கு பின் கடந்த 2005-ஆம் ஆண்டில் அம்பானி நிறுவனங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பிறகு முதன்முறையாக அம்பானி நிறுவனங்களுக்கிடையில்

மேலும்...

 தங்கம் விலை சரிவு
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அதாவது பவுனுக்கு 200 ரூபாய் குறைந்தால் அடுத்த சில நாட்களிலேயே 500 ரூபாய் அதிகரித்து வந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கடந்த மாதம் 1-ந் தேதி ஒரு பவுன் ரூ.23

மேலும்...

 கிங்பிஷர் ஏர்லைன்ஸ் பங்குகளை வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே இந்நிறுவனப் பங்கின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களும், அதிக நிகர சொத்துள்ள தனிநபர்களும் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி

மேலும்...

 `சென்செக்ஸ்' மீண்டும் 19,000 புள்ளிகளை தாண்டியது
நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து நான்காவது தினமாக வியாழக்கிழமை அன்றும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' 188 புள்ளிகள் அதிகரித்து, 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 19,000 புள்ளிகளைத் தாண்டியது. இதனால், முதலீட்டாளர்கள் பங்குகளின் சந்தை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in