2013–ஆம் ஆண்டில் தங்கம் விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும்

2013–ஆம் ஆண்டில் தங்கம் விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும்
வரும் 2013–ஆம் ஆண்டில் உள்நாட்டில் தங்கம் விற்பனை 25 சதவீதம் அதிகரிக்கும் என கோட்டக் மகிந்திரா வங்கியின் செயல் துணைத் தலைவர் சேகர் பண்டாரி தெரிவித்துள்ளார்.

தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் உலக அளவில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. நடப்பு ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டில் திருமணம் செய்வதற்கு ஏற்ற நல்ல நாட்கள் அதிகமாக வருகின்றன. இது, இவ்வாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, தங்க ஆபரணங்கள் விற்பனை அதிகரிக்கும் என பண்டாரி கூறியுள்ளார்.

தற்போது ஒரு அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சராசரியாக ரூ.54.90–ஆக உள்ளது. இது, 2013–ஆம் ஆண்டில் சராசரியாக ரூ.52.75–ஆக குறையும். அதாவது, டாலர் மதிப்பு குறைந்து ரூபாய் மதிப்பு உயரும்.

இதன்படி, நடப்பு ஆண்டில் 10 கோடி டாலர் மதிப்பிற்கு தங்கத்தை இறக்குமதி செய்ய ரூ.549 கோடி செலவானால், 2013–ஆம் ஆண்டில் இது ரூ.527.50 கோடியாக குறையும். ஆக, இறக்குமதி செலவினம் குறைந்து, தங்கம் விலை குறையும். இதனாலும் தங்கம் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2011–12–ஆம் நிதி ஆண்டில் 5,800 கோடி டாலர் மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கு தங்கம் இறக்குமதி அதிகமாக உள்ளதே முக்கிய காரணமாகும். எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரியை இரண்டு மடங்கு உயர்த்தியது.

நடப்பு நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதியை மதிப்பு அடிப்படையில் 3,800 கோடி டாலராக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 34 சதவீதம் குறைவாகும்.

இதுபோன்ற காரணங்களால் நடப்பு 2012–ஆம் ஆண்டில் தங்க ஆபரணங்கள் விற்பனை 2011–ஆம் ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011–ஆம் ஆண்டில் தங்கம் இறக்குமதி வரலாறு காணாத வகையில் 967 டன்னாக உயர்ந்து இருந்தது. இது, இவ்வாண்டில் 45 சதவீதம் குறைந்து 532 டன்னாக குறையும் என்றும், 2013–ஆம் ஆண்டில் 550 டன்னாக இருக்கும் என்று தெரிகிறது.
https://goo.gl/Ad245U






10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்