tamilkurinji logo


 

3 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது,




செய்திகள் >>> தமிழகம்

3 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது

First Published : Sunday , 25th December 2011 12:28:50 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

3 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது,

3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்' போலீசாரால் கைது செய்யப்பட்டார். 4 மாதங்களில் 2 பெண்களை அவர் திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா கெலகினதோட்டே கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (வயது 23). இவர் சிக்பள்ளாப்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

எனக்கும், பெங்களூர் கிராமப்புற மாவட்டமான ஒசக்கோட்டை தாலுகா ஒனசேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பில்லிசொன்னப்பா என்பவரின் மகன் வேணு(வயது 26) என்பவருக்கும் கடந்த 26 8 2011 அன்று திருமணம் நடைபெற்றது.

டெம்போ டிரைவரான வேணு, எங்கள் வீட்டு முன்பு டெம்போவை நிறுத்தி கழுவி சுத்தம் செய்வார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் திருமணத்துக்கு பின்னர்தான் அவர் ஏற்கனவே வேறு இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் வேணு, பவித்ரா உள்பட மொத்தம் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா பொன்னேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த பைரவி(26) என்ற பெண்ணைதான் வேணு முதலில் திருமணம் செய்து உள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளான்.

அதன்பிறகு பவித்ராவை 2 வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் 3 வதாக கடந்த 28 11 2011 அன்று கோலார் மாவட்டம் நரசாப்பூர் தாலுகாவை சேர்ந்த கங்காதர் என்பவரின் மகள் ரேணுகா(28)வை கோலாரில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இவர் 3 வது திருமணம் செய்த போது, கங்காதரிடம் எனக்கு திருமணம் ஆகவில்லை. சொந்தமாக கார் வைத்து, பிழைப்பு நடத்தி வருகிறேன் என்று கூறி ரேணுகாவை ஏமாற்றி திருமணம் செய்து உள்ளார்.

அதன்பிறகு தனது 2 வது மனைவி பவித்ராவிடம், கடந்த வாரம் புதிய கார் வாங்க வேண்டும் என்று கூறி ரூ.11/2 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கிச் சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பவித்ரா, அக்கம் பக்கம் விசாரித்த போதுதான் வேணு மேலும் 2 பெண்களை திருமணம் செய்து உள்ள விவகாரம் தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு போலீசில் அவர் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னன்'வேணுவை கைது செய்தனர். நரசாப்பூரில் உள்ள 3 வது மனைவி ரேணுகா வீட்டில் வைத்து அவரை போலீசார் பிடித்தனர்.

அதன்பிறகே முதல் மனைவி மற்றும் 3 வது மனைவிக்கு தனது கணவன் மேலும் 2 பெண்களை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. கைதான வேணு, மேலும் வேறு பெண்களை திருமணம் செய்து உள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா மற்றும் ரேணுகாவை 4 மாதங்களில் அடுத்தடுத்து ஏமாற்றி திருமணம் செய்து உள்ளார்.

3 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது, 3 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது, 3 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் கைது,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர்
கர்ப்பிணி மனைவி முன்னால் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த ப்ரனய் பெருமல்லா, அம்ருதாவிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ப்ரனய் பெருமல்லா தன்னுடைய மனைவி அம்ருதாவுடன் அங்குள்ள ஜோதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக

மேலும்...

 3 குழந்தைகளுடன் வீட்டுக்கு தீ வைத்து தாய் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்று குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என்று தெரியவந்துள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிழகுண்டூர் கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி தனலட்சுமி என்ற பெண்

மேலும்...

 மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in