tamilkurinji logo
 

7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை

First Published : Thursday , 4th January 2018 01:23:13 PM
Last Updated : Thursday , 4th January 2018 01:23:13 PM


7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி அருகே உள்ள வெத்தலகாரனூரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38), கொத்தனார். இவரது மனைவி பிரியா. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களது மகன் மோகன் (15). மாட்டுகாரனூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மணிகண்டனும், பிரியாவும் வீட்டில் இருந்து வேலைக்காக சேலத்திற்கு புறப்பட்டு வந்தனர்.

அரையாண்டு பள்ளி விடுமுறை முடிந்தும் மோகன் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையே அங்கு வந்த அவரது நண்பரும், உறவினருமான கிருஷ்ணன் என்பவரது மகன் லோகேஷ் (12) மோகனின் வீட்டிற்கு வந்து அவரை வெளியில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

லோகேஷ் சங்கீதப்பட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அவரும் பள்ளிக்கு செல்லாததால் இருவரும் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே விளையாடி உள்ளனர்.அப்போது மோகன் திடீரென வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் மோகனை மீட்டு சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே லோகேஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மாணவர் லோகேஷ் பள்ளிக்கு சரியாக செல்லாமல் விளையாட்டு போக்கில் இருந்ததும், ஏற்கனவே பள்ளியில் இருந்த தண்ணீர் குடத்தில் வி‌ஷத்தை கலந்ததும் தெரிய வந்தது.

தற்போது தனது நண்பரும் வி‌ஷம் குடித்ததால் பயந்து போய் தூக்குபோட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவன் தற்கொலைக்கு சரியான காரணம் தெரியாததால் 2 மாணவர்களும் படித்த பள்ளியில் உள்ள வகுப்பு ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று காலை பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துகிறார்கள்.

விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
7-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தூக்கு போட்டு தற்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சென்னை தொழிலதிபர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு நிலக்கரி கொள்முதலில் ரூ.487 கோடி முறைகேடு
இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ. 487 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர், என்.டி.பி.சி. எம்.எம்.டி.சி. ஏ.பி.சி.பி.எல். நிறுவனத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011ம் ஆண்டு

மேலும்...

 2 பெண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை
 பள்ளிக்கரணை அருகே மனைவியுடன் ஏற்பட்ட மனத்தாங்கலில் கணவன் காணாமல் போனதால் மனமுடைந்த பெண் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணை பெரும்பாக்கம் நூக்கம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்

மேலும்...

 மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்கா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவரது மனைவி பார்வதி (74). இவர்களுக்கு இந்திராணி (45) என்ற மகளும், பன்னீர் (40) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து ஈரோட்டில் வசித்து வருகிறார்.

மேலும்...

 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஸ் பாஸ் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு
பள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பஸ் பாஸ் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in