tamilkurinji logo


 

9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
செய்திகள் >>> தமிழகம்

9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை

First Published : Tuesday , 3rd July 2018 11:50:11 AM
Last Updated : Tuesday , 3rd July 2018 11:50:11 AM


9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சென்னையில் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண் ஐடி ஊழியர் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (24). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.


ஆவடியில் தனது தோழிகளுடன் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி தினமும் வேலைக்கு சென்று வந்தார் பிரியங்கா.

இந்த நிலையில், நேற்று (திங்கள்கிழமை) மாலை பணிமுடிந்ததும், அவர் வேலை பார்த்த அலுவலகக் கட்டடத்தின் 9வது மாடிக்குச் சென்றார்.


அங்கிருந்து அவர் திடீரென தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த பிரியங்கா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து, சிறிது நேரத்தில் இறந்தார்.


இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரியங்காவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பல கோணங்களில் விசாரணை பிரியங்கா சடலத்தை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும், ஆந்திராவிலுள்ள பிரியாவின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர். பணிச்சுமை காரணமா, காதல் பிரச்சினை இருந்ததா, குடும்ப பிரச்சினை இருந்ததா என்பது போன்ற பல்வேறு வகையான கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


 விசாரணையில், புது தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, பிரியங்காவிற்கு அவரது வீட்டில் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்ததாகவும், அது பிடிக்காமல் பெற்றோருடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில்தான் பிரியங்கா தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema 9வது மாடியில் இருந்து குதித்து பெண் ஐடி ஊழியர் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in