9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்

9 தினங்களாக மேற்கொண்ட தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கெஜ்ரிவால்
டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், ரேஷன் பொருட்களை நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11-ந்தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, மந்திரி சத்யேந்தர் ஜெயின் இருவரும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போராட்டம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு எதிராக ஹரிநாத் ராம் என்ற வக்கீல் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்டோர் சார்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்துக்கு எதிராக உமேஷ் குப்தா என்ற வக்கீலும் ஐகோர்ட்டை அணுகி உள்ளார்.

இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று நீதிபதிகள் ஏ.கே.சாவ்லா, நவின் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலின் போராட்டத்தை நீதிபதிகள் கடுமையாக கண்டித் தனர். பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், 9 நாட்களாக மேற்கொண்டு வந்த தர்ணா போராட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முடித்துக்கொண்டார். கவர்னர் அறிவுறுத்தலை ஏற்று தர்ணா போராட்டத்தை கெஜ்ரிவால் கைவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  தலைமைச்செயலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கவர்னர் அறிவுறுத்தியதால் போராட்டத்தை முடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.


https://goo.gl/GdzKrj


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்