tamilkurinji logo


 

CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை,IPL 2018: Bombay HC bars MCA from using water from Pavana dam for CSK matches in Pune

IPL,2018:,Bombay,HC,bars,MCA,from,using,water,from,Pavana,dam,for,CSK,matches,in,Pune




செய்திகள் >>> இந்தியா

CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை

First Published : Wednesday , 18th April 2018 08:15:51 PM
Last Updated : Wednesday , 18th April 2018 08:15:51 PM


CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை,IPL 2018: Bombay HC bars MCA from using water from Pavana dam for CSK matches in Pune

புனேவில் நடைபெற இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானா அணையில் இருந்து நீர் எடுக்க மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்துக்கு தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மைதான பராமரிப்புக்கு அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகமே கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சோறுக்கு பதில் ஸ்கோர் தேவையா என கேட்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த எதிர்ப்பு வலுத்தது.

இந்நிலையில் கடந்த வாரம் அண்ணா சாலையே ஸ்தம்பித்துவிட்டதால் வீரர்களும், ரசிகர்களும் மைதானத்தை வந்தடைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்திற்கு இடையில் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றன.

இதனையடுத்து போட்டி எங்கு நடத்துவது என்று பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக ஆலோசனை நடத்தியது. இதில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

 எனவே சென்னையில் நடத்த திட்டமிட்ட மொத்தம் 7 போட்டிகளில் ஒன்று மட்டும் நடைபெற்றது. மீதமுள்ள 6 போட்டிகளை புனேவில் நடத்த தயாராக உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு சிஎஸ்கே அணியும் ஒப்புதல் அளித்தது.

திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் புனேவில் நடைபெறும் என்று மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புனேவில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளுக்கு பவானா அணையில் இருந்து நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மறு அறிவிப்பு வரும் வரை மைதான பராமரிப்புக்கு அணையில் இருந்து நீர் எடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை,IPL 2018: Bombay HC bars MCA from using water from Pavana dam for CSK matches in Pune CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை,IPL 2018: Bombay HC bars MCA from using water from Pavana dam for CSK matches in Pune CSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை,IPL 2018: Bombay HC bars MCA from using water from Pavana dam for CSK matches in Pune
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்
கேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்த மாநிலமும் முடங்கிப்போயுள்ளது.ரெயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்,

மேலும்...

 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in